நிச்சயமாக இவர்கள் என்னிடம் வற்புறுத்தி, கடுமையான வார்த்தை பிரயோகித்து கேட்கின்றார்கள், அல்லது என்னை கஞ்சன்…

நிச்சயமாக இவர்கள் என்னிடம் வற்புறுத்தி, கடுமையான வார்த்தை பிரயோகித்து கேட்கின்றார்கள், அல்லது என்னை கஞ்சன் என்கிறார்கள். நான் கஞ்சன் அல்ல.

ஒரு முறை நபி ஸல் அவர்கள் (போர் பொருள்களை) பங்கீடு செய்து கொண்டிருந்தார்கள். "இறைத் தூதர் அவர்களே! இந்தப் பொருளைப் பெறும் இவர்களை விட தகுதி வாய்ந்த மற்றவர்கள் உள்ளனர்." என்று கூறினேன். "நிச்சயமாக இவர்கள் என்னிடம் வற்புறுத்திக் கேட்கின்றார்கள், அல்லது என்னை கஞ்சன் என்கிறார்கள். நான் கஞ்சன் அல்ல" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி (ஸல்) அவர்கள் தமக்குக் கிடைத்த கனீமத் பொருளிலிருந்து சில மனிதர்களுக்கு மாத்திரம் கொடுத்து விட்டு மற்றும் சிலரை விட்டு விட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில் உமர் (ரழி) அவர்கள் கொடுக்காது விட்டவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள்தாம் அதற்கு தகுதியானவர்கள் என்று நபி (ஸல்) அவர்களிடத்தில் கூறினார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவர்களின் ஈமானிய பலயீனத்தினால் என்னிடம் வற்புறுத்திக் கேட்டது மட்டுமல்லாமல் அவர்களின் இந்நிலை காரணமாக மோசமான வார்த்தையினால் அல்லது என்னை கஞ்சத்தனம் எனும் பண்பைப் பெற்றவன் என குறிப்பிடும் அளவுக்கு என்னை நிர்பந்தித்தார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் தனது பண்பில் கஞ்சத்தனம் என்பது கிடையாது என்பதை உணர்த்தவும் அவர்களுடன் மிதமாகவும், இணைவோடும் நடந்து கொள்வதற்கு இவ்வழிமுறையை தெரிவு செய்தார்கள்

التصنيفات

சிறப்புக்களும் ஒழுக்கங்களும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கொடை