நீங்கள் இந்த கணவாய்களிலும்,பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து விடுவீர்களாயின் அது ஷைத்தானின் புறத்தினாலாகும்.

நீங்கள் இந்த கணவாய்களிலும்,பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து விடுவீர்களாயின் அது ஷைத்தானின் புறத்தினாலாகும்.

மக்களுக்கு எங்கேனும் ஒரு இடத்தில் தங்கிச் செல்ல நேரிட்டால் அவர்கள் அங்கு கணவாய்களிலும் ,பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து போய்விடுவார்கள்.எனவே அவர்களிடம் ரஸூல் (ஸல்) அவர்கள் "நீங்கள் இந்த கணவாய்களிலும்,பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து விடுவீர்களாயின் அது ஷைத்தானின் புறத்தினாலாகும்" என்று கூறினார்கள்.அதன் பின்னர் அவர்கள் எங்கேனும் தங்கிச் செல்ல இறங்கினால் சிலர், சிலருடன் சேர்ந்து நெருக்கமாக இருந்து கொள்வார்கள்.என அபூ ஸஃலபா அல்குஷனீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]

الشرح

பிரயாணத்தின் நடுவே மனிதர்களுக்கு எங்கேனும் தங்கிச் செல்ல நேர்ந்தால் அவர்கள் கூட்டத்திலிருந்து பிரிந்து அங்குள்ள கணவாய்களிலும்,பள்ளத்தாக்குகளிலும் தனித்தனியாகத் தங்கி வரலாயினர்.எனவே அவர்களிடம் ரஸூல் (ஸல்) அவர்கள் அவர்களின் இந்தப் பிரிவினை ஷைத்தானின் ஒரு செயலாகும்.அல்லாஹ்வின் நேசர்களைப் பயமடையச் செய்யவும்,அவர்களின் பகைவர்களை உட்சாகப் படுத்தவும் அவன் இப்படி செய்கின்றான்,என்று நபியவர்கள் கூறினார்கள்.இதன் பின்னர் அவர்கள் எங்கேனும் தங்கினால் சிலர்,சிலருடன் சேர்ந்து நெருக்கமாக இருந்து கொள்வார்கள்.மேலும் அவர்கள் இவ்வாறு மிகவும் நெருக்கமாக இருந்து கொள்வதன் காரணமாக அவர்களுக்கு ஒரு விரிப்பு விரிக்கப்பட்டாலும் அது அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக இருந்தது.

التصنيفات

பிரயாணத்தின் ஒழுங்குகளும் சட்டங்களும்