ரஸூல்அ (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தீக்குண்டத்தில்…

ரஸூல்அ (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது அது நெருப்பை அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது என கூறினார்கள்.

உம்மு ஷரீக் (ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் பல்லியை கொல்லும்படி உத்திரவிட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது அது (நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிக் கொண்டிருந்தது’. என்றும் கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல் அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு இந்த ஹதீஸில் கட்டளையிட்டுள்ளார்கள்.இப்ராஹீம் நபி அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது அந்நெருப்பின் தீச்சுவாளை கடுமையாக எரிய வேண்டும் என்பதற்காக பல்லி ஊதிக்கொண்டிருந்தது என்பதற்காக என நபி ஸல் அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த விடயம் தவ்ஹீத் வாதிகளுக்கும் அல்லாஹ்வை மட்டும் கடவுளாக தூய்மையாக ஏற்று வாழும் மக்களுக்கும் முழுமையான பகைமையை வெளிப்படுத்தும் ஒரு பிராணியாக பல்லி உள்ளது என்பதை இது காட்டுகிறது.

التصنيفات

முன்சென்ற இறைத்தூதர்கள், அனுமதிப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட மிருகங்களும் பறவைகளும்