எனது வயது ஏழு வருடங்களாக இருக்கும் போது…

எனது வயது ஏழு வருடங்களாக இருக்கும் போது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றி இருக்கிறேன்.

"எனது வயது ஏழு வருடங்களாக இருக்கும் போது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடன் சேர்ந்து இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றி இருக்கிறேன்" என அஸ் ஸாஇப் இப்னு யசீத் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

அஸ்ஸாஇப் இப்னு யஸீத் ரழி அவர்கள் ஒரு சிறிய ஸஹாபியாவார். அவரது குடும்பத்தினர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஹஜ் செய்ததினால் ஹஜ்ஜதுல் வதாவை அடைந்து கொண்டார்கள். இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் சிறுவர்கள் ஹஜ் செய்வதை அங்கீகரித்திருக்கிறார்கள். அந்த ஹஜ் சிறுவர்களுக்கான கடமையான ஹஜ்ஜாக கருதப்படமாட்டாது. அவர்கள் பருவ வயதைஅடைந்தவுடன் பர்லான ஹஜ்ஜை இன்னொரு முறை நிறைவேற்றுவது அவசியமாகும் ஹஜ் செய்யும் சிறுவர்கள் பெரியவர்கள் செய்வது போல் ஹ்ராம் அணிதல், தைத்த ஆடையை தவிர்ந்திருத்தல், தல்பியா முழங்குதல் போன்றவற்றை செய்தல் வேண்டும். அவருக்கு செய்வதற்கு இயலாமல் இருந்தால் அவரின் வலியாக இருக்கும் அவரின் தந்தை அல்லது அவரின் தாய் அவரின் கடமைகளைச் செய்வார். அத்தவ்ழீஹ் லிஷர்ஹில் ஜாமிஇஸ் ஸஹீஹ் 473 உம்ததுல் காரி10-210 நுஸ்ஹதுல்முத்தகீன்2-898 ஷர்ஹூ ரியாழுஸ்ஸாலிஹீன் லி இப்னிஉஸைமீன் 5-326-327

التصنيفات

ஹஜ் மற்றும் உம்ராவின் சட்டங்களும் பிரச்சினைகளும்