"ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய ஒரு குற்றத்தைச்…

"ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய ஒரு குற்றத்தைச் செய்துவிட்டேன்.எனவே அதன் தண்டனையை என் மீது நிறைவேற்றுங்கள்,என்றார்."

"ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே!தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன்.அதன் தண்டனையை என் மீது நிறைவேற்றுங்கள்,என்றார்"அவ்வமயம் தொழுகையின் நேரம் வந்டது விட்டது.எனவே அவர்,ரஸூல் (ஸல்) அவர்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.தொழுகை முடிந்ததுவும் அவர்,அல்லாஹ்வின் தூதரே!நான் தண்டனைக்குரிய ஒரு குற்றத்தைச் செய்துவிட்டேன்.எனவே அல்லாஹ்வின் கட்டளையை என் மீது நிறைவேற்றுங்கள்.என்றார்.அதற்கு நபியவர்கள்,நீங்கள் நம்முடன் தொழுகையில் இருந்தீர்களா?என்றார்கள்.அதற்கு அவர் ஆம் என்றார்.அப்பொழுது நபியவர்கள்,உமக்கு மன்னிப்பளிக்கப்பட்டுள்ளது,என்றார்கள்.என்று அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஹதீஸ் விளக்கம்:ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! தண்டனைக்குரிய குற்ற மொன்றை நான் செய்துவிட்டேன் ஆகையால் அதன் தண்டனையை என் மீது நிறைவேற்றுங்கள்,என்றார்.அதாவது அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுங்கள் என்றார்.அவ்வமயம் அந்த மனிதர் செய்த குற்றம் என்ன வென்று அவரிடம் ரஸூல் (ஸல்) அவர்கள் விசாரிக்கவில்லை என்று அனஸ் (ரழி) குறிப்பிடுகின்றார்கள்.இதற்கு அந்த மனிதனின் குற்றம் என்ன வென்பதையும் அதற்கு மன்னிப்பளிக்கப்பட்டுவிட்டது என்பதையும் வஹ்யுவின் மூலம் நபியவர்கள் அறிந்திருந்தார்கள்,என்று நியாயம் கூறப்படுகிறது.மேலும் அவ்வமயம் தொழுகையின் நேரம் வந்துவிட்டபடியால் அவர் நபிகளாருடன் தொழுதார்.அதாவது அவ்வமயம் ஏதோவொரு தொழுகையின் அல்லது அஸர் தொழுகையின் நேரம் வந்துவிட்டது ஆகையால்,நபியவர்கள் அதனைத் தொழுதார்கள்.மேலும் அதனை நிறைவேற்றி முடிந்ததுவும்,அன்னார் திரும்பினார்கள்.அப்பொழுது அந்த மனிதர் எழுந்து நின்று,அல்லாஹ்வின் தூதரே! தண்டனை பெறுவதற்குரிய குற்றத்தை நான் செய்துவிட்டேன்.அதன் தண்டனையை என் மீது நறைவேற்றுங்கள்,என்றார்.அதாவது இது சம்மந்தமாக அல்லாஹ்வின் வேதத்திலும்,ஸுன்னாவிலும் என்ன கட்டளை வந்துள்ளதுவோ அதனை என் விடயத்தில் நிறைவேற்றி வையுங்கள்,என்றார்.அப்பொழுது நபியவர்கள் நீங்கள் நம்முடன் தொழவில்லையா? என்றார்கள்.அதற்கு அந்த மனிதர் ஆம் என்றார்.அப்பொழுது ரஸூல் (ஸல்) அவர்கள் உமது பாவம் அல்லது உமது தண்டனைக்கு எது காரணமாக இருந்ததுவோ அது மன்னிக்கப்பட்டுவிட்டது என்றார்கள்.மேலும் இங்கு "ஹத்து" என்று குறிப்பிட்டிருப்பது விபச்சாரம்,மது அருந்துதல் போன்ற குற்றங்களுக்காக இஸ்லாம் விதித்துள்ள தண்டனையை அல்லாமல் எச்சரிக்கை செய்வதற்காக வழங்கும் பொதுவான தண்டனையையே.ஏனெனில் அதற்குரிய தண்டனை எது வென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆகையால் அதனை அப்படியே நிறைவேற்றுவது கடமை.மேலும் அந்த மனிதன் செய்த குற்றம் என்ன வென்று நபியவர்கள் விசாரிக்காமல் இருந்ததன் தத்துவம் யாதெனில்,அது "ஹத்து"க்குரிய குற்மல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தமையே.மேலும் அந்த மனிதர் தான் செய்த குற்றம் யாதென்று அறிவுக்கும் பட்சத்தில் அது "ஹத்து"க்குரிய குற்றமாக இருந்தால் அதனை நிறைவேற்றுவது கடமை.ஏனெனில்,அவர் தொவ்பா செய்திருந்தாலும்,அல்குர்ஆன் குறிப்பிடும் தண்டனைக்கு விதிவலக்கான நியாயம் எதுவும் காணப்பட்டாலன்றி அதனை "தொவ்பா" அழித்து விடாது.எனவே விபச்சாரம் செய்த ஒரு"திம்மீ" காபிர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் அவருக்குரிய "ஹத்து"விடயமும் அப்படிப்பட்டதே.(அதாவது அதில் அவருக்கு விதிவிலக் களிக்கபடும்.திம்மீ என்பவர் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்து வரும் ஒரு காபிர் குடிமகனாவார்) மேலும் பெரும் பாவத்திற்குத் தொழுகை கப்பாரா-பிராயச்சித்தமாக ஆகுமா,என்பது பற்றி ஹதீஸில் தௌிவாகக் குறிப்பிடப்படவில்லை.எனினும் அப்படி கூறுவதாயின் முன்னர் குறிப்பிட்ட "இஜ்மா"வுக்கு அமைய இந்த ஹதீஸுக்கு விளக்கமளிப்பது கடமை (அதாவது எந்த சந்தர்ப்பத்தில் தொழுகை பெரும் பாவத்திற்குப் பிராயச்சித்தமாக அமையும் என்ற விளக்கத்தைக் கவணத்திற் கொள்வது அவசியம்).

التصنيفات

பாவமீட்சி