அல்அஷ்அரீ கோத்திரத்தார் யுத்த களத்தில் இருக்கும் போது அல்லது மதீனாவில் தங்களின் குடும்பத்தாரிடையே உணவு…

அல்அஷ்அரீ கோத்திரத்தார் யுத்த களத்தில் இருக்கும் போது அல்லது மதீனாவில் தங்களின் குடும்பத்தாரிடையே உணவு பற்றாக்குறை ஏற்படும் போது

அல்அஷ்அரீ கோத்திரத்தார் யுத்த களத்தில் இருக்கும் போது அல்லது மதீனாவில் தங்களின் குடும்பத்தாரிடையே உணவு பற்றாக் குறை ஏற்படும் போது,தங்களிடம் இருக்கும் உணவுகளை ஒரு துணியில் ஒன்று சேர்ப்பார்கள் பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து தங்களுக்கு மத்தியில் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.எனவே அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்,நான் அவர்களைச் சார்ந்தவன், என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

அஷ்அரிய்யா என்போர் அபூ மூஸா (ரழி) அவர்களின் சமூகத்தைச் சார்ந்தவர்களாவர்.இவர்கள் தங்களிடம் உணவு குறைந்து விடும் போது, அல்லது அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாதில் இருக்கும் வேளையில் அவர்கள் தங்களின் உணவுகளை ஒன்று சேர்த்து அதனைத் தங்கள் மத்தியில் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.அவர்களின் இந்த சிறந்த பண்பின் காரணமாக அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களைச் சார்ந்தவர்கள்,நபிகளாரின் அன்புக்குரியவர்கள் என்ற சிறப்பை அடைந்து கொள்ளும் தகுதியைப் பெற்றனர். மேலும் அவர்களைப் போன்று ரஸூல் (ஸல் அவர்களும் தன்னை விட மற்றவர்களின் தேவைக்கு முன்னுரிமை அளித்தல்,அல்லாஹ்வுக்கு அடிபணிதல் எனும் நற் பண்புகள் உடையவராக இருந்தபடியால் தானும் அவர்களைச் சார்ந்தவர் என்று ரஸூல் (ஸல்) அவர்கள் குறிபிட்டார்கள்.என்பதை இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

التصنيفات

கூட்டு, முஸ்லிம் சமூகம்