உங்களில் எவரேனும் தொழும் வேளையில் அவருக்கு சிறு தூக்கம் ஏற்பட்டால் அவர் தன்னை விட்டும் தூக்கம் நீங்கும்…

உங்களில் எவரேனும் தொழும் வேளையில் அவருக்கு சிறு தூக்கம் ஏற்பட்டால் அவர் தன்னை விட்டும் தூக்கம் நீங்கும் வரையில் நித்திரை செய்து கொள்ளவும்.

உங்களில் எவரேனும் தொழும் வேளையில் அவருக்கு சிறு தூக்கம் ஏற்பட்டால் அவர் தன்னை விட்டு தூக்கம் நீங்கும் வரை நித்திரை செய்து கொள்ளவும். ஏனெனில் அவர் சிறு தூக்கத்தோடு தொழுவாராகில் தான் பாவ மன்னிப்புக் கோருகின்றாரா,அல்லது தன் மீது சாபமிட்டுக் கொண்டிருக்கின்றாரா என்று சில வேளை அவர் அறிய மாட்டார்.என ரஸூல் (ஸல் அவர்கள் கூறினார்கள்,என ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஹதீஸின் மூலப் பொருள்.இபாதத்தில் தன்னை வருத்திக் கொள்வது மக்றுூஹான-விரும்பத் தகாத செயல் என்பதாகும் எனவே ஒரு தொழுகையாளி தொழுது கொண்டிருக்கும் போது தனக்கு தூக்கம் அதிகரித்து வருவதை அவர் உணர்ந்தால் அவர் உடனே தன் தொழுகையை நிறுத்து விட வேண்டும், அல்லது அதனைப் பூர்த்தி செய்து விடவேண்டும்.காரணம் அவர் தனக்கு களைப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தொழும்போது அதன் காரணமாக தன் மீது சாபமிட்டுக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளவதற்காகத்தான்

التصنيفات

இஸ்லாத்தின் சிறப்பும் சிறப்பம்சங்களும், இரவுத் தொழுகை