"போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள்…

"போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை, மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்."

என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். "யார் இந்தப் பெண்மணி?" என்று கேட்டார்கள். அவள் (அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) "போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்" என்று கூறினார்கள், என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஆயிஷா (ரழி) அவர்களை ஒரு பெண் சந்தித்து அவர்களிடம் தான் செய்யும் அதிமான வணக்கங்கள் குறித்தும்,தொழுகை குறித்தும் பிரஸ்தாபித்தாள். இதனை ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கூற நபி ஸல் அவர்கள் வணக்கத்தில் எல்லைமீறி ஈடுபடுவதை விட்டும், தனது சக்திக்கு அப்பாற்பட்டு வருத்திக்கொண்டு செய்வதை விட்டும் அப்பெண்மணியைத் தடுத்தார்கள். அது மட்டுமல்லாமல் அல்லாஹ் நீங்கள் வணக்கங்கள் செய்து சலிப்புற்று அதனை விட்டுவிடுமளவுக்கு உங்களுடன் உறவாடுவதில்லை, எனவும் அதனால் அல்லாஹ்வின் அருளும், கூலியும் தொடர்ந்து கிடைப்பதற்கு உங்களால் முடிந்ததை தொடர்ந்து செய்வதுதான் வழியாகும் எனவும் தெரிவித்தார்கள்.

التصنيفات

இரவுத் தொழுகை