தன் தந்தை இல்லை என்பதை அறிந்த நிலையில் ஒருவர் தன் தந்தை அல்லாதவரை தந்தை என வாதாடினால் சொர்க்கம் அவருக்குத்…

தன் தந்தை இல்லை என்பதை அறிந்த நிலையில் ஒருவர் தன் தந்தை அல்லாதவரை தந்தை என வாதாடினால் சொர்க்கம் அவருக்குத் தடையாகும் (ஹராமாகும்) என்று நபி (ஸல்) கூறினார்கள்.

ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரழி அறிவிக்கின்றார்கள். தன் தந்தை இல்லை என்பதை அறிந்த நிலையில் ஒருவர் தன் தந்தை அல்லாதவரை தந்தை என வாதாடினால் சொர்க்கம் அவருக்குத் தடையாகும் (ஹராமாகும்) என்று நபி (ஸல்) கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இந்த ஹதீஸ் ஜாஹிலிய்யாக் கால மக்கள் செய்து கொண்டிருந்த ஒரு விஷயத்தை பற்றி எச்சரித்து தெளிவு படுத்துகிறது. அதுதான் ஒரு குழந்தையை அவரின் தந்தை அல்லாதவருக்கு தந்தையென சேர்த்துவிடுதல் குற்றமாகும். ஒரு மனிதனைப் பொறுத்தவரை அவர் தனது தந்தையுடன் இணைக்கப்படல் வேண்டும், அதுதான் சரியான வழிமுறையாகும். தனது தந்தை இல்லையென அறிந்தும் ஒருவர் பிறர் ஒருவருரை தந்தையென கூறி தர்க்கிப்பது ஹராமாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தை சேர்ந்தவர், அக்கோத்திரம் ஏனைய கோத்திரங்களோடு ஒப்பிடுகிற போது தரத்தில் குறைந்தது என வைத்துக் கொள்வோம். இக்கோத்திரத்தில் உள்ள ஒருவர், தனது கோத்திரத்தை விட சிறந்த கோத்திரத்தில் தன்னை இணைத்து தனது அந்தஸ்தை, கௌரவத்தை அதிகரித்துக் கொள்ள நினைக்கிறார், இவரும் இந்த ஹதீஸின் படி சொர்க்கம் ஹராமாக்கப்பட்டவராவர்

التصنيفات

கணவனும் மனைவியும் சாபமிடல்