ஸனிய்யதுல் வதாஃ' எனும் இடத்திற்கு நபியவர்களை சந்திப்பதற்காக சிறார்களுடன் நாம் சென்றோம்.

ஸனிய்யதுல் வதாஃ' எனும் இடத்திற்கு நபியவர்களை சந்திப்பதற்காக சிறார்களுடன் நாம் சென்றோம்.

அஸ்ஸாஇப் இப்னு யஸீத் அறிவிக்கிறார்கள் "தபூக் யுத்தத்திலிருந்து நபியவர்கள் திரும்பி வரும் போது மக்கள் அவரைச் சந்தித்தார்கள்.நானும் அவரை சிறார்களுடன் 'தனிய்யதுல் வதாவில்' சந்தித்தேன்" என கூறுகிறாரக்கள்.

[அதன் இரண்டு அறிவிப்பின் பிரகாரமும் ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

நபி (ஸல்)அவர்கள் தபூக் யுத்தத்திலிருந்து ஸஹாபாக்களுடன் திரும்பி வரும்போது மதீனாவுக்கு அருகாமையில் அமைந்துள்ள 'தனியதுல் வதாஃ' எனும் இடத்திற்கு நபியவர்களை வரவேற்பதற்காக அவர்கள் (ஸஹாபாக்கள்) புறப்பட்டுச் சென்றார்கள்.காரணம் யாதெனில் நபி ஸல் அவர்களையும்,போரில் கலந்து கொண்டவர்களையும் மகிழ்வூட்டவும்,அவர்களின் மனதை சாந்தப்படுத்தவும்,போருக்குச் செல்லாது இருப்போருக்கு ஆர்வமூட்டவுமாகும்.

التصنيفات

பிரயாணத்தின் ஒழுங்குகளும் சட்டங்களும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் போர்களும் படையனுப்புதல்களும்