நான் எழுபது "அஹ்லுஸ் ஸுப்பாக்களை"-திண்ணைத் தோழர்களைப் பார்த்தேன்.அவர்களில் எவரிடமும் தங்களின் மேல் பாகத்தை…

நான் எழுபது "அஹ்லுஸ் ஸுப்பாக்களை"-திண்ணைத் தோழர்களைப் பார்த்தேன்.அவர்களில் எவரிடமும் தங்களின் மேல் பாகத்தை மறைக்கும் துணி எதுவும் இருக்கவில்லை.

நபித் தோழர் ஒருவர் நான் எழுபது அஹ்லுஸ் ஸுப்பாக்களை-திண்ணைத் தோழர்களைப் பார்த்தேன்.அவர்களில் எவரிடமும் தங்களின் மேல் பாகத்தை மறைக்கும் துணி எதுவும் இருக்கவில்லை.அவர்களிடம் ஒரு கைலி அல்லது ஒரு போர்வை மாத்திரமே இருந்தது.அதனை அவர்கள் கழுத்தில் சேர்த்துக் கட்டியிருந்தனர்.அதில் சிலது பாதிக் கெண்டைக் காலையும்,இன்னும் சிலது கரண்டைக் காலையும் எட்டியிருந்தது.எனவே தங்களின் அவ்ரத் தெரிந்து விடுமோ என்பதை விரும்பாத அவர்கள் அதனைத் தம் கைகளால் கூட்டிப் பிடித்துக் கொண்டனர்.என்று கூறினார்,என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

அஹ்லுஸ்ஸுப்பா-திண்ணை வாசிகள் என்போர் தங்களின் வீடு வாசல்களையும்,சொத்து சுகங்களையும் தங்களுக்கு மிகவும் விருப்பமான தங்களின் தாய் நாடு மக்காவில் விட்டு விட்டு அங்கிருந்து வெறுங் கையோடு மதீனாவுக்கு புலம் பெயர்ந்து வந்த ஏழை முஹாஜிரீன்கள்.இந்த திண்ணை வாசிகள் எழுபது பேர்களை விட சற்று அதிகளவிலான ஆண்கள்.மஸ்ஜித் நபியின் கடைக் கோடியில் ஒரு பந்தல்போடப்பட்டிருந்தது.அதுவே அந்த ஸுப்பா-திண்ணையாகும்.அந்த ஏழை முஹாஜிரீன்கள் அதன் கீழே படுத்துக் கொள்வார்கள்.மேலும் கோடைக் காலத்திலும் மாரி காலத்திலும் அவர்கள் அணிந்திருந்த உடை எப்படியிருந்தது,என்பது பற்றிக் குறிப்பிடும் போது அபூ ஹுரைரா (ரழி) அவர்கள்"அவர்கள் ஒருவரிடமாவது தங்களின் மேல் பாகத்தை மறைத்துக் கொள்ளும் படியான ஒரு சட்டையோ அல்லது ஒரு துணியோ இருக்கவில்லை எனவே அவர்கள் ஒரு கைலியை அல்லது ஒரு போர்வையைக் கொண்டு மாத்திரம் தங்களின் கீழ் பாகத்தில் அணிந்து கொண்டனர்."என்று தெரிவிக்கின்றார்கள்.இதன் மூலம் அந்தத் திண்ணைத் தோழர்களிடம் மேல் கீழ் என்று இரண்டு ஆடைகள் இருக்கவில்லை.எனவே அவர்கள் ஒரு துணியைக் கொண்டே மேலிருந்து கீழ் வரைத் தங்களின் மேணியை மறைத்துக் கொண்டனர் என்பதை அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.மேலும் இவர்களின் நிலையைப் பற்றி அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது,அவர்கள் அணிந்து கொள்ளும் ஆடை நன்றாக விரித்துக் கட்டிக் கொள்வதற்குப் போதாமல் இருந்த படியால் சிறு பிள்ளைகளுக்கு அவர்களின் உடையின் ஒரு முணையை அவர்களின் பிடரியில் கட்டி விடுவது போன்று அந்தத் தோழர்கள் தாங்கள் அணிந்து கொள்ளும் துணியின் ஒரு முணையை தங்களின் பிடரியில் கட்டி வைத்தார்கள்.மேலும் அவர்கள் சிலரின் ஆடை கெண்டைக்காலின் பாதி வரையும் இன்னும் சிலரின் ஆடை கரண்டைக்கால் வரையிலும் நீண்டிருந்தது.மேலும் தங்களின் அவ்ரத் வௌியில் தென்படுவதை விரும்பாத அவர்கள் அந்த ஆடையைத் தம் கையால் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள்.என்று குறிப்பிடுகின்றார்கள்.அதாவது அவர்கள் தொழும் வேளையில் ருகூஃ,ஸுஜூதுகளுக்குச் செல்லும் போது தங்களின் அவ்ரத் வௌியில் தெரியா வண்ணம் அந்த ஆடையைக் கூட்டிப் பிடித்துக் கொள்வார்கள்.அதிகமான ஸஹாபாக்களின் நிலை இப்படித்தான் இருந்தது.எனவே அவர்கள் உலகின் பாலும் அதன் அலங்காரத்தின் பக்கமும் சாராமல் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர்.உலகம் அவர்களுக்கு திறந்து கொடுக்கப்பட்ட பின்னரும் அவர்கள் அதில் மூழ்கிவிடவில்லை.மாறாக அல்லாஹ் அவர்களை மரணமடையச் செய்யும் வரை அவர்கள் தங்களிடம் உள்ளதைக் கொண்டு திருப்தி யடைந்தவர்களாக உலகைவிட்டும் பற்றற்று வாழ்ந்து வந்தனர்.என்பதை இந்த ஹதீஸ் தௌிவு படுத்துகின்றது

التصنيفات

சிறப்புக்களும் ஒழுக்கங்களும், நல்லோர்களின் நிலைகள்