நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை…

நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதனை முடியுமானளவு செய்யுங்கள். அளவுக்கு அதிகமான கேள்விகளைக் கேட்டதும், தங்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்களோடு ஒத்துப் போகாததுமே உங்களுக்கு முன்னால் இருந்தவர்களை அழிவுக்கு ஆட்படுத்தியது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) கூறுகின்றார்கள் : "நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதனை முடியுமானளவு செய்யுங்கள். அளவுக்கு அதிகமான கேள்விகளைக் கேட்டதும், தங்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்களோடு ஒத்துப் போகாததுமே உங்களுக்கு முன்னால் இருந்தவர்களை அழிவுக்கு ஆட்படுத்தியது".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி (ஸல்) அவர்கள் ஒன்றை விட்டும் எம்மைத் தடுத்தால் விதிவிலக்கின்றி முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும், ஒன்றை ஏவினால் முடியுமானளவு செய்ய வேண்டும் என்பதை இந்நபிமொழி எமக்கு அறிவிக்கின்றது. பின்னர் முன்னைய சில சமுதாயங்களைப் போன்று நாமும் ஆகிவிடுவதை எமக்கு எச்சரித்தார்கள். அவர்கள் அளவுக்கதிகமான கேள்விகளைக் கேட்டு, தமது நபிமார்களுடன் முரண்பட்டதால் பேரழிவின் மூலம் அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். எனவே அவர்களைப் போன்று நாமும் ஆகிவிடக் கூடாது, நாமும் அவர்களைப் போன்றே அழிய நேரிடும்.

فوائد الحديث

ஏவல்களை எடுத்து நடத்தல், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளல்.

இங்கு தடுக்கப்பட்ட எதிலும் செய்வதற்குச் சலுகை வழங்கப்பட வில்லை, ஏவல் சக்தி பெறுவதுடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒன்றை விடுவது முடியுமான விடயமாகும், ஏவப்பட்ட ஒன்றை செய்வதற்குத் தான் மேலதிக ஆற்றல் அவசியமாகின்றது.

அளவுக்கதிமான கேள்வியின் மீதான தடையை அறிஞர்கள் இரு வகைப்படுத்தியுள்ளனர். 1. மார்க்க விடயங்களைக் கற்றல் தொடர்பான கேள்விகள். இது ஏவப்பட்ட ஒன்றாகும், நபித்தோழர்களின் கேள்விகள் இவ்வகையையே சார்ந்தது. 2. எல்லை மீறி, சிரமப்படுத்திக் கொள்ளும் வகையில் அமையும் கேள்விகள். இதுவே தடுக்கப்பட்டதாகும்.

முன்சென்ற சமூகங்களைப் போன்று தமது நபிக்கு மாறுசெய்வதை விட்டும் இச்சமூகத்தை எச்சரிக்கின்றது.

தடை செய்யப்பட்டவை சிறிதளவு, அதிகளவு அனைத்தையும் உள்ளடக்குகின்றது. ஏனெனில் தவிர்ந்து கொள்ளும் போது அதில் சிறிதளவு, அதிகளவு அனைத்தையும் தவிர்ந்து கொள்வதன் மூலம்தான் சாத்தியமாகும். உதாரணமாக வட்டியை இஸ்லாம் தடுத்துள்ளது. அதில் சிறிதளவு, அதிகளவு அனைத்தையும் இத்தடை உள்ளடக்குகின்றது.

ஹராத்திற்கு இட்டுச் செல்லும் காரணிகளை விடுவதும் அதனைத் தவிர்ந்து கொள்வதில் அடங்கும்.

உங்களுக்கு முடியுமானளவு எனும் வார்த்தையினூடாக மனிதனுக்கும் சக்தி, ஆற்றல் போன்றன உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். மனிதனுக்கு எவ்வித சக்தியும் இல்லை, அவன் தனது செயல்களில் அல்லாஹ்வால் நிர்ப்பந்திக்கப்பட்டவன், மனிதன் பேசும் போது தனது கையை அசைப்பது கூட அவனுடைய சுய சக்தியிலல்ல, நிர்ப்பந்திக்கப்படுகின்றான் என்ற கொள்கையுடைய ஜபரிய்யாக்கள் எனும் வழிகெட்ட பிரிவினருக்கு இந்த நபிமொழியில் மறுப்புள்ளது. இது பாரிய தீய விளைவுகள் ஏற்படக்கூடிய தவறான கருத்து என்பதில் ஐயமில்லை.

நபி (ஸல்) அவர்களின் ஏவலைச் செவிமடுக்கும் ஒருவர் அது கடமையா, ஸுன்னத்தா எனக் கேட்பது அநாவிசயாமானதாகும், ஏனெனில் நபியவர்கள் உங்களால் முடியுமன அளவு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஏவியதும், தடுத்ததும் மார்க்கமாகும், அது அல்குர்ஆனில் இடம்பெற்றாலும், இல்லாவிட்டாலும் சரியே. எனவே குர்ஆனை விட மேலதிகமாக ஸுன்னாவில் உள்ள ஏவல், விலக்கல்களையும் கடைபிடிக்கப்பட வேண்டும்.

அளவுக்கதிமான கேள்விகள், குறிப்பாக அல்லாஹ்வின் பெயர், பண்புகளின் யதார்த்தம், மறுமை நிகழ்வுகள் போன்ற மனித அறிவால் எட்ட முடியாத மறைவான விடயங்களைப் பற்றி அதிக கேள்விகள் கேட்கக் கூடாது, அவ்வாறு கேட்கும் பட்சத்தில் எல்லைமீறியவராக ஆகிவிடலாம்.

அளவுக்கதிகமான கேள்விகள், தமது நபிமார்களுடன் முரண்பட்டுக் கொண்டதே முன்னைய சமுதாயங்கள் அழியக் காரணமாகும்.

التصنيفات

வார்த்தைகளின் கருத்துக்களும் சட்டம் பெறும் முறையும், ஷரீஆவின் இலக்குகள், முன் சென்ற சமூகங்களின் வரலாறுகள்