மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்

மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "மீசையைக் கத்தரியுங்கள்,தாடியை வளர விடுங்கள்".

[ஸஹீஹானது-சரியானது] [புஹாரியும்,முஸ்லிமும் ஒன்றுபட்டது.இதன் வாசகம் முஸ்லிம் அவர்களுக்குரியது]

الشرح

ஹதீஸ் விளக்கம்: ஒரு முஸ்லிம் தன் மீசையை எடுத்து விட வேண்டும் என்றும், அது அலங்கோலமாக இல்லை எனில் நாற்பது நாற்களை விடவும் அதிகமாக அதனை விட்டு வைக்க வேண்டாம் என்றும், அவன் பணிக்கப் பட்டுள்ளான். மேலும் "மீசையைக் கத்தரித்தல், நகம் வெட்டுதல், அக்குள் முடியைப் பிடுங்குதல், மருமஸ்தான முடிகளை சிரைத்தல் எனும் விடயங்களில் நாற்பது நாற்களை விடவும் அதிகமாக நாம் விட்டு வைக்கக் கூடாதென நமக்கு காலம் குறித்துத் தரப்பட்டுள்ளது"என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள், (முஸ்லிம்). மேலும் அபூ தாவுதின் ஒரு அறிவிப்பில் "மருமஸ்தான முடிகளை சிரைத்தல், நகம் வெட்டுதல், மீசையைக் கத்தரித்தல் ஆகிய விடயங்களில் எங்களுக்கு நபியவர்கள் நாற்பது நாட்களுக்கு ஒரு முறை என காலம் குறித்துத் தந்துள்ளார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் "தனது மீசையிலிருந்து சிலதை எடுத்துப் போடாதவன் நம்மைச் சேர்ந்தவனல்ல"எனும் நபி மொழி அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.இது வலுவான ஹதீஸ் என அஷ்ஷைக் அல்பானீ அவர்கள் தனது ஸஹீஹ் ஜமியுஸ்ஸஹீர் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.(2/1113) இலக்கம்(6533) எனவே தோலின் வெண்மை தெரியும்படி மீசையைக் கத்தரித்து விட வேண்டும். அல்லது உதட்டையும் தாண்டி அதிகமாகவுள்ள சில வேளை உணவு தொங்கிக் கொள்ளக் கூடியதான முடியை எடுத்து விட வேண்டும் என்பது இதிலிருந்து உறுதி செய்யப்படுகிறது.மேலும் தாடியை வளர விட வேண்டு மென இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே மொழியியலாளர்கள் தாடி என்பது முகத்திலுள்ள முடியையும்,இரண்டு தாடையில் இருக்கும் முடியையும் குறிக்கும் என்பர்.அதாவது முகத்தின் இரு மருங்கிலும்,இரு கன்னத்திலும் உள்ள முடியைக் குறிக்கும்.மேலும் தாடியை வளர விடுதல் என்பதன் நோக்கம் அதனை சொற்பமாகவோ அதிகமாகவோ சிரைக்காமலும்,கத்தரிக்காமலும் அதனை உள்ளபடி விட்டு வைப்பதாகும்.ஏனெனில் الإعفاء எனும் சொல் அதிகம்,தாராளம் என்ற கருத்தைக் கொண்டதாகும். ஆகையால் فاعفوها وكثروها என்றால் அதனை அப்படியே தாரளமாகவும்,அதிகமாகவும் இருக்க விட்டு விடுங்கள் என்பதாகும்.மேலும் தாடியை வளர்க்க வேண்டு மென்ற கட்டளையை நபியவர்கள் பல வாசகங்கள் மூலம் எடுத்துரைத்துள்ளார்கள் وفروا أرخو" أعفوا எனும் சொற்கள் ஹதீஸ்களில் வந்துள்ளன.அவற்றின் பொருள் முறையே தொங்க விடுங்கள்,தாராளமாக இருக்கச் செய்யுங்கள்,வளர விடுங்கள் என்பதாகும்.இது எல்லாமே தாடிக்கு இடையூறு செய்யாமல் அதனை வளர விட்டு விட வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.மேலும் தாடியை கத்தரிப்பது பாரசீக மக்களின் கலாச்சாரமாகும் இப்னு உமர் அவர்கள் அறிவிக்கும்.புஹாரியில் பதிவாகியுள்ள "நீங்கள் முஷ்ரிகீன்களுக்கு மாறு செய்யுங்கள்" என்ற ஹதீஸின் பிரகாரம் இதனை ஷரீஆ தடை செய்துள்ளது.மேலும் வளர்த்தல் பற்றிய கட்டளையை முஷ்ரிகீன்களுக்கு மாறு செய்தல் எனும் காரணத்துடன் இணைத்துப் பாரக்கும் போது, அதனை வளர்ப்பது கடமை என்பது தௌிவாகிறது. மேலும் இன்னொரு சமூகத்திற்கு ஒப்பாக இருப்பது ஹராமான விடயமாகும்.ஏனெனில் "எவன் இன்னொரு சமூகத்தினருக்கு ஒப்பாக இருப்பானோ அவன் அந்த சமூகத்தைச் சேர்ந்தவனாவான்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

فوائد الحديث

தாடியை மழிப்பது, கத்தரிப்பது ஹராமாகும், அதனை வளர்ப்பது கடமையாகும், அதற்கு மாற்றமாக மீசையைக் கத்தரிக்க வேண்டும்.

மீசையை அவ்வாறே விட்டுவிடாமல் கத்தரிப்பது அவசியமாகும், அது உதட்டுடன் சேர்ந்திருக்கும் பகுதியை மாத்திரமோ, முழு மீசையையுமோ கத்தரிக்கலாம்.

التصنيفات

இயல்பாக பேணவேண்டிய சுன்னாக்கள்