சூனியத்தை எடுப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது அது ஷைத்தானின் செயலாகும் எனக் கூறினார்கள்.

சூனியத்தை எடுப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது அது ஷைத்தானின் செயலாகும் எனக் கூறினார்கள்.

ஜாபிர் (ரலி) கூறினார்கள் : சூனியத்தை எடுப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது "அது ஷைத்தானின் செயலாகும்" எனக் கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]

الشرح

அறியாமைக் காலத்தில் சூனியத்தை சூனியத்தால் எடுப்பது போன்று சூனியம் செய்யப்பட்டவருக்கு சிகிச்சை செய்வது பற்றி நபியவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அது ஷைத்தானின் செயலாகும், அல்லது அவனது ஊசலாட்டமாகும் என பதிலளித்தார்கள். ஏனெனில் இது சூனிய வகைகள் மூலமும், ஷைத்தானைப் பயன்படுத்தியும் செய்யப்படும் முறையாகும். எனவே இது தடை செய்யப்பட்ட, இணைவைப்பாகும். இதில் அனுமதிக்கப்பட்ட முறை எதுவெனில் மார்க்க சட்டபூர்வமான மந்திரித்தல் மூலம், அல்லது சூனியம் வைக்கப்பட்ட இடத்தைக் கண்டறிந்து, அல்குர்ஆன் ஓதுவதுடன் அதனைக் கையினால் அவிழ்த்தல் மூலம், அல்லது அனுமதிக்கப்பட்ட சிகிச்சை முறை மூலம் சூனியத்தை எடுக்கலாம்.

فوائد الحديث

பாவத்தில் வீழ்ந்திடாமலிருக்க மார்க்க சட்டங்களில் அறியாதவற்றை அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.

அறியாமைக் கால முறைப் பிரகாரம் சூனியத்தை எடுப்பது தடுக்கப்பட்டதாகும், ஏனெனில் அதுவும் சூனியமாகவே உள்ளது, சூனியம் இறைநிராகரிப்பாகும்.

ஷைத்தானின் எந்தச் செயலையும் செய்வது ஹராமாகும்.

التصنيفات

ஜாஹிலிய்ய விடயங்கள், இணைவைப்பு