إعدادات العرض
நான், 'அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருவர் தமது மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் என்ன?' எனக் கேட்டபோது, நபியவர்கள்…
நான், 'அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருவர் தமது மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் என்ன?' எனக் கேட்டபோது, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'நீ உண்டால் அவளுக்கும் உணவளிக்க வேண்டும். நீ ஆடையணிந்தால் (அல்லது சம்பாதித்தால்) அவளுக்கும் ஆடையளிக்க வேண்டும். அவளது முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை அசிங்கப்படுத்தக் கூடாது. அவளை வீட்டிற்குள்ளே தவிர ஒதுக்கி வைக்கக்கூடாது
முஆவியா அல் குசைரீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான், 'அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருவர் தமது மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் என்ன?' எனக் கேட்டபோது, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'நீ உண்டால் அவளுக்கும் உணவளிக்க வேண்டும். நீ ஆடையணிந்தால் (அல்லது சம்பாதித்தால்) அவளுக்கும் ஆடையளிக்க வேண்டும். அவளது முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை அசிங்கப்படுத்தக் கூடாது. அவளை வீட்டிற்குள்ளே தவிர ஒதுக்கி வைக்கக்கூடாது.
الترجمة
العربية Bosanski English فارسی Français Indonesia Русский Türkçe اردو हिन्दी 中文 Kurdî Português Nederlands অসমীয়া Tiếng Việt ગુજરાતી Kiswahili پښتو සිංහල Hausa Tagalog മലയാളം नेपाली Magyar ქართული తెలుగు Македонски Svenska Moore Română ไทย Українська मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ বাংলা Wolof ភាសាខ្មែរ ಕನ್ನಡ Malagasy Kinyarwanda Shqip Српскиالشرح
ஒரு கணவன் தனது மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் பற்றி நபியவர்களிடம் வினவப்பட்ட போது, சில விடயங்களை நபியவர்கள் கூறினார்கள்: பின்வருவன அவற்றில் சிலவாகும்: 1. அவளுக்குக் கொடுக்காமல் நீ மாத்திரம் சாப்பிட்டு விடாதே. மாறாக நீ சாப்பிடும் போதெல்லாம் அவளுக்கும் உணவளி. 2. நீ மாத்திரம் ஆடை அணிந்துகொள்ளாமல், நீ அணியும் போதும், நீ சம்பாதித்து உனக்கு வசதி இருக்கும் போதும் அவளுக்கும் ஆடை வழங்க வேண்டும். 3. தேவைக்காகவும் நியாயமான காரணத்திற்காகவும் மாத்திரமே அவளை அடிக்க வேண்டும். ஒழுக்கமூட்டவோ, அல்லது கடமைகளை விட்டதானாலோ அவளை அடிக்க வேண்டி ஏற்பட்டால், காயம் ஏற்படாதவாறு அடிக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. ஏனெனில் முகம் மிக முக்கியமான, தென்படக்கூடிய உறுப்பாக உள்ளதோடு, கண்ணியமான பகுதிகளையும், மென்மையான உறுப்புக்களையும் அது கொண்டுள்ளது. 4. அவளை ஏசாதே! அல்லது, 'அல்லாஹ் உனது முகத்தை அசிங்கப்படுத்திவிடட்டும்.' என்று கூறி விடாதே. அவளோ, அவளது உடலின் ஏதாவது ஒரு பகுதியோ அழகின்றி அசிங்கமாக உள்ளது என்று கூறி விடாதே! ஏனெனில், அல்லாஹ்வே மனிதனின் முகத்தையும் உடலையும் படைத்தவன். அவன் அழகாகவே படைத்துள்ளான். படைக்கோலத்தைக் குறைகூறுவது படைத்தவனைக் குறைகூறுவது போன்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக!. படுக்கையிலே தவிர அவளை ஒதுக்கி விடாதே. அவளை விட்டு வேறிடம் சென்று விடாதே. அவளை வேறு வீட்டிற்கு மாற்றி விடாதே! இது கணவன் மனைவியருக்கு மத்தியில் சர்வசாதாரணமாக நடக்கும், தண்டிக்கும் முறைகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்.فوائد الحديث
நபித் தோழர்கள் தாம் ஏனையோருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், தமக்குரிய உரிமைகளையும் அறிவதில் ஆர்வமாக இருந்துள்ளார்கள்.
மனைவிக்கு செலவழிப்பது, ஆடையளிப்பது, தங்க இடம் கொடுப்பது ஆகியவை கணவனின் கடமையாகும்.
மானசீக ரீதியாகவோ, வெளிப்படையாகவோ அசிங்கப்படுத்துவது கூடாது.
'நீ கீழத்தரமான கோத்திரத்தைச் சேர்ந்தவள், அல்லது கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள் போன்ற வார்த்தைகளைக் கூறுவதும் தடுக்கப்பட்ட அசிங்கப்படுத்தலின் வடிவங்களாகும்.
التصنيفات
தம்பதியர்களுக்கிடையிலான உறவு