إعدادات العرض
'நிச்சயமாக, இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை…
'நிச்சயமாக, இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை வென்றுவிடும். எனவே, (கூடுதலான வழிபாடுகள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைபிடியுங்கள். இயன்றதைச் செய்யுங்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 'நிச்சயமாக, இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை வென்றுவிடும். எனவே, (கூடுதலான வழிபாடுகள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைபிடியுங்கள். இயன்றதைச் செய்யுங்கள். நற்செய்தி கூறுங்கள் (கூடுதல் வழிபாடுகளை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் துணையாக்கிக் கொள்ளுங்கள்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Tagalog Türkçe 中文 हिन्दी Tiếng Việt සිංහල ئۇيغۇرچە اردو Hausa Kurdî Português Русский অসমীয়া Kiswahili ગુજરાતી Nederlands پښتو नेपाली മലയാളം Svenska Кыргызча Română ಕನ್ನಡ Српски తెలుగు ქართული Moore Magyar Македонски Čeština Українська Lietuvių Kinyarwanda አማርኛ Wolof Malagasy Azərbaycan ไทย मराठी ਪੰਜਾਬੀ دری Deutsch ភាសាខ្មែរ Oromoo Shqipالشرح
இஸ்லாமிய மார்க்கமானது அதன் அனைத்து விவகாரங்களிலும் இலகு மற்றும் எளிமையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இயலாமை மற்றும் தேவை போன்ற காரணங்களின் போது இலகுவைக் கடைப்பிடிப்பது மிகவும் வலியுறுத்தப் படுகிறது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். மார்க்க விவகாரங்களில் ஆழ்ந்து சென்று தீவிரமாக ஈடுபடுட்டு மென்மையை கைவிடுவதானது, குறித்த செயலை செய்ய முடியாத நிலை உருவாவததுடன், குறித்த செயலில் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ ஈடுபடாது அச்செயலை செய்வதை விட்டும் விலகியிருப்பதற்கும் வழிவகுக்கும். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தீவிர நிலையை விட்டு நடுநிலை பேணுமாறு வலியுறுத்துகிறார்கள். ஒரு அடியான் தனக்கு செய்யுமாறு பணித்த விடயங்களில் கவனக் குறைவாக இருக்கக் கூடாது அதே வேளை தன்னால் சுமக்க முடியாத காரியங்களை சுமக்கவும் கூடாது. ஒரு விடயத்தை மிகவும் பரிபூரணமாகசெய்ய முடியவில்லை என்றிருந்தால் அவனுக்கு இயலுமான வகையில் அதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். இயலாமை காரணமாக பரிபூரணமாக ஒரு அமலை நிறைவேற்றுவதற்கு முடியாத ஒருவர் அவர் செய்யும் அமல்கள் - நற்காரியங்கள்- குறைவாக இருப்பினும் குறித்த செயல்களை தொடராக செய்பவராக இருந்தால் அவருக்கு அதிகமான நன்மை உண்டு என நபியவர்கள் நற்செய்தி கூறுகிறார்கள். காரணம் இயலாமை என்பது அவரின் சக்திக்கு உட்பட்டதன்று. ஆகையால் அவருக்கு வழங்கப்படுகின்ற கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படமாட்டாது. இந்த உலகம் ஒரு பயணத் தளமாகவும், மறுமைக்குச் செல்லும் பாதையாகவும் இருப்பதால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும் மூன்று நேரங்களில் தொடர்ச்சியான வழிபாடுகளின் மூலம் உதவி தேடுமாறு கட்டளையிட்டுள்ளனர். இந்த மூன்று நேரங்களும் பின்வருமாறு: 1- அல்-கத்வா: பகலின் முதல் பகுதியில் நடப்பது. பகலின் முதல் பகுதி என்பது அதிகாலை தொழுகைக்கும் சூரிய உதயத்திற்கும் இடையிலான நேரத்தைக் குறிக்கிறது. 2- அல் ரவ்ஹது: சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடப்பது. 3- துல்ஜா: இரவு முழுவதும் அல்லது இரவின் ஒரு பகுதி நடப்பது. பகலில் வேலை செய்வதை விட இரவில் வேலை செய்வது மிகவும் கடினம் என்பதால், 'வஷைய்உன் மினத்துல்ஜா'என்று கூறி அதன் ஒரு பகுதியில் வேலை செய்யக் கட்டளை இடப்பட்டுள்ளது.فوائد الحديث
இஸ்லாமிய சட்டதிட்டங்கள் எளிமையானவை, அது தீவிரவாதத்திற்கும் மெத்தனப்போக்கிற்கும் மிடையில் நடுநிலையைப் பேணுகிறது.
ஒரு நபர் தனது இயலுமைக்கு ஏற்பவே தமக்கு விதிக்கப்பட்ட கட்டளைகளை அலட்சியம் அல்லது மிகைப்படுத்தல் இன்றி நிறைவேற்றுதல் வேண்டும்.
ஒரு அடியான் உற்சாகமிக்க நேரங்களை இறைவழிபாட்டிற்காக தேர்தெடுப்பது அவசியமாகும். குறிப்பிடப்பட்ட மூன்று நேரங்களும் உடலுக்கு மிகவும் சுகமானதும் உட்சாகத்தைத் தரக்கூடியதுமான நேரங்களாகும்.
இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகையில் இங்கே, ஒரு வகையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் ஒரு பயணியை நோக்கி பேசுவது போல் உள்ளது. இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நேரங்கள் பயணிக்குரிய மிகவும் பொருத்தமான நேரங்கள் என்பதால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றை உற்சாகமிக்க நேரங்கள் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்கள். ஏனென்றால், ஒரு பயணி இரவும் பகலும் தொடர்ந்து பயணித்தால் சிறிது தூரம் சென்ற பிறகு சோர்வடைவார். மாறாக, இந்த உற்சாகமான நேரங்களில் நடந்து செல்வாறாயின் பயணத்தைத் தொடர்வது எளிதாக இருக்கும்.
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸில் மார்க்க ரீதியான சலுகைகளை எடுத்து நடப்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ஏனெனில், சலுகை வழங்கப்பட்ட இடங்களில்,(ருஹ்ஸாவை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட இங்களில்) கட்டுப்பாடான முறையை (அஸீமாவை) எடுத்துக் கொள்வது ஒருவகை தீவிரப்போக்காகும்;. உதாரணமாக, ஒருவர் தண்ணீரைப் பயன்படுத்த இயலாத நிலையில், தயம்முக்கு பதிலாக வுழுச் செய்வதை வலியுறுத்தினால், அது அவருக்கு தீங்கு விளைவிக்கும். இது சலுகையை மறுதளிக்கும் ஒரு விடயமாகும்.
இப்னுல்-முனீர் கூறுகிறார்: இந்த ஹதீஸ் நபியவர்கள்; ஒரு தீர்க்கதரிசி என்பதற்கான ஒரு அடையாளத்தை உள்ளடக்கியுள்ளது. அதாவது தனது சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களைச் தீவிரமாக செய்வதற்கு முயற்சிக்கும் எவரும் சோர்வடைவதை நாமும் நமக்கு முன்பிருந்தவர்களும் கண்டிருக்கிறோம். இவ்வாறு கூறுவதால் வணக்கவழிபாட்டை முறையாகவும் நிறைவாகவும் செய்வதற்கு எவ்விதத்தடையுமில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது பாராட்டத்தக்க அணுகுமுறையாகும். ஒருவர் சோர்வடையும் அளவுக்கு அதிகமாகச் செய்வதும், மிகசிறப்புக்குரிய ஒருவிடயத்தை விட்டுவிடுமளவிற்கு உபரியான விடயத்தில் எல்லைமீறி ஈடுபடுவதும் அல்லது ஒரு கடமையான செயலை அதன் நேரத்திற்கு அப்பால் தாமதப்படுத்தக் காரணமாக அமையும் அளவிற்கு ஸுன்னதான வழிபாடுகளில் அதிகமாகச் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக, இரவு முழுவதும் தஹஜ்ஜுத் தொழுது தூங்கிவிட்டு, ஜமாஅத்தாக ஃபஜ்ர் தொழுகையைத் தொழ முடியாமல் போனவர், அல்லது சூரிய உதயம் வரை தூங்கிய நபரை குறிப்பிடமுடியும்.
