'அப்படியாயின் என்னைச் சாட்சியாளராக வைக்காதீர்கள். நான் அநீதத்திற்கு சாட்சியாக இருக்க மாட்டேன்'

'அப்படியாயின் என்னைச் சாட்சியாளராக வைக்காதீர்கள். நான் அநீதத்திற்கு சாட்சியாக இருக்க மாட்டேன்'

அந்நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : தனது தாயார், பின்து ரவாஹா அவர்கள் தனது (நுஃமானின்) தந்தையிடம் அவரது சொத்திலிருந்து, தனது மகனுக்காக சில அன்பளிப்புக்களை வழங்குமாறு கேட்டார். அவரும் ஒரு வருடமளவில் அதைத் தாமதப்படுத்திக் கொண்டிருந்த பின்னர், அவ்வாறு செய்யலாம் என அவருக்குத் தோன்றியது. அப்போது தாயார், என்னுடைய மகனுக்கு நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்காக நபியவர்களைச் சாட்சியாக வைக்கும் வரை நான் பொருந்திக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். உடனே, எனது தந்தை, சிறுவனாக இருந்த எனது கையைப் பிடித்து நபியவர்களிடம் அழைத்துச் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! இவருடைய தாயார் பின்து ரவாஹா அவர்களுக்கு, நான் இவருக்கு வழங்கியுள்ள அன்பளிப்புக்காக உங்களை சாட்சியாளராக வைப்பது விருப்பமாக உள்ளது.' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், 'பஷீரே! இவரல்லாத வேறு பிள்ளைகள் உமக்கு உண்டா?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'ஆம்' என்று கூறினார். அப்போது நபியவர்கள், 'அவர்கள் அனைவருக்கும் இதுபோன்று வழங்கியுள்ளீர்களா?' எனக் கேட்க, அவர், 'இல்லை' என்றார். அப்போது நபியவர்கள், 'அப்படியாயின் என்னைச் சாட்சியாளராக வைக்காதீர்கள். நான் அநீதத்திற்கு சாட்சியாக இருக்க மாட்டேன்' என்று கூறினார்கள். முஸ்லிமின் அறிவிப்பில், 'இதற்கு வேறொரவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

[சரியானது] [இமாம்களான புஹாரியும், முஸ்லிமும் இதை பதிவு செய்துள்ளனர். இதற்கு பல்வேறு வாசகங்கள் உள்ளன]

الشرح

நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, தனது தாயாராகிய அம்ரா பின்து ரவாஹா அவர்கள், தனது தந்தையிடம் அவரது மகனுக்காக அவரது சொத்திலிருந்து ஒரு அன்பளிப்பைத் தருமாறு வேண்டிக் கொண்டதாகவும், பஷீர் அவர்கள் விருப்பமின்றி ஒரு வருடம் பிற்படுத்திக் கொண்டிருந்து விட்டு, பின்பு அவளது வேண்டுகோளுக்கு இணங்க அவரது மகன் நுஃமானுக்கு ஏதாவது கொடுக்கலாம் எனத் தோன்றியது. அப்போது தாயார், என்னுடைய மகனுக்கு நீங்கள் வழங்கும் அன்பளிப்பக்காக நபியவர்களைச் சாட்சியாக வைக்கும் வரை நான் பொருந்திக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். உடனே, எனது தந்தை, சிறுவனாக இருந்த எனது கையைப் பிடித்து நபியவர்களிடம் அழைத்துச் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! இவருடைய தாயார் பின்து ரவாஹா அவர்களுக்கு, நான் இவருக்கு வழங்கியுள்ள அன்பளிப்புக்காக உங்களை சாட்சியாளராக வைப்பது விருப்பமாக உள்ளது.' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், 'பஷீரே! இவரல்லாத வேறு பிள்ளைகள் உமக்கு உண்டா?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'ஆம்' என்று கூறினார். அப்போது நபியவர்கள், 'அவர்கள் அனைவருக்கும் இதுபோன்று வழங்கியுள்ளீர்களா?' எனக் கேட்க, அவர், 'இல்லை' என்றார். அப்போது நபியவர்கள், 'அப்படியாயின் என்னைச் சாட்சியாளராக வைக்காதீர்கள். நான் அநீதத்திற்கு சாட்சியாக இருக்கமாட்டேன்' என்று கூறினார்கள். முஸ்லிமின் அறிவிப்பில் அவரைக் கண்டிக்கும் விதமாக, 'இதற்கு வேறொரவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

فوائد الحديث

ஆண், பெண் பிள்ளைகளுக்கு மத்தியில் அன்பளிப்புக்கள் மற்றும் நன்கொடைகள் விடயத்தில் நீதமாக நடந்துகொள்வது அவசியமாகும். ஆனால் செலவினம் என்பது, ஒவ்வொரு தேவைக்கும் ஏற்பத் தீர்மானிக்கப்படும்.

பிள்ளைகளில் ஒருவரை விட இன்னொருவரை மேன்மைப்படுத்துவது அநீதமாகும். அதற்காக சாட்சியமாக நிற்பதோ, சாட்சியம் கூறுவதோ கூடாது.

நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : அன்பளிப்புக்களில் பிள்ளைகளுக்கு மத்தியில் சமப்படுத்துவது அவசியமாகும். ஒவ்வொருவருக்கும் மற்றவருக்கு வழங்கியதைப் போன்றே வழங்க வேண்டும். வேற்றுமை காட்டக் கூடாது. எமது சில அறிஞர்கள், இரண்டு பெண்களுக்கு வழங்கப்படும் அளவு ஒரு ஆணுக்கு வழங்கப்படவேண்டும் என்று கூறுகின்றார்கள். எனினும், சரியான, பிரபல்யாமான கருத்து, ஹதீஸின் வெளிப்படையான கருத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மத்தியில் சமமாக வழங்க வேண்டும் என்பதாகும்.

மார்க்கத்துக்கு முரணாக நிகழும் சட்டங்கள் நிறைவேறவோ, செல்லுபடியாகவோ மாட்டாது.

விளக்கம் கேட்க வாய்ப்புள்ள விடயங்களில், தீர்ப்பளிப்பவரோ, பத்வா வழங்குபரோ விளக்கம் கேட்பது. ஏனெனில், நபியவர்கள், 'உமது எல்லாப் பிள்ளைகளுக்கும் இவ்வாறு வழங்கினீர்களா?' எனக் கேட்டுள்ளார்கள்.

நவவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இந்த ஹதீஸ், ஒரு தந்தை தனது பிள்ளைக்குக் கொடுத்த அன்பளிப்பை மீளப்பெற்றுக் கொள்ளலாம் என்பதை அறிவிக்கின்றது.

சகோதரர்களுக்கு மத்தியில் அன்பை ஏற்படுத்தும் விடயங்களை செய்யுமாறும், அவர்களுக்கு மத்தியில் குரோதத்தை ஏற்படுத்தும், அல்லது பொற்றோரை நோவினை செய்ய வழிவகுக்கும் காரணிகளை செய்யாமலிருக்குமாறும் ஏவுதல்.

التصنيفات

பிள்ளைகளுக்குச் செலவளித்தல்