'யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும்,…

'யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99தடவைகள் கூறிவிட்டு 100 வதாக லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீ(க்)க லஹூ லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்) எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்'

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் : 'யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99தடவைகள் கூறிவிட்டு 100 வதாக லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீ(க்)க லஹூ லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்) எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்'.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

பர்ழான தொழுகை முடிந்த பின் கூற வேண்டிய தஸ்பீஹ் பற்றி தெளிவு படுத்தியுள்ளார்கள் அவை பின்வருமாறு : 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் பரிசுத்தமானவன்) 33 தடவைகள் 'சுப்ஹானல்லாஹ்' என்பதன் பொருள் அல்லாஹ் எல்லா வகையான குறைகளிலிருந்தும் தூய்மையானவன் என்பதாகும். 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்புக்கே)33 தடவைகள் 'அல்ஹம்துலில்லாஹ'; என்பதன் கருத்து அல்லாஹ்வை அவனுக்குரிய பரிபூரண பண்புகளினால் அன்புடனும் மகிமைப்படுத்தியும் புகழ்வதாகும். அல்லாஹு அக்பர் 33 தடவைகள் (அல்லாஹ் மிகப்பெரியவன்) அதாவது அல்லாஹ் எல்லாவற்றையும் விட உண்ணதமானவன் மிகவும் கண்ணியத்துக்குரியவன். 100 வதாக லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீ(க்)க லஹூ லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்) அதாவது : உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. முழுமையான ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! மகிமைபடுத்துதல் மற்றும் நேசம் கொள்ளுதலுடன் புகழுக்கும் பாராட்டுக்கும் தகுதியானவன், அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் அவனுக்கு இயலாமை என்பது கிடையாது. இதனை யார் கூறுகிறாரோ கடல் கொந்தளிப்பின் போதும் அலைகளின் போதும் ஏற்படும் நுரையளவு அதிகமாக அவரின் பாவங்கள் இருந்தாலும் அவை அழிக்கப்பட்டு மன்னிக்கப் பட்டு விடும்.

فوائد الحديث

இந்த திக்ரை பர்ழான தொழுகைக்குப் பிறகு ஓதுவது விரும்பத்தக்கது.

இந்த திக்ர் (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஒரு காரணமாகும்.

அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை, கருணை மற்றும் மன்னிப்பை இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டுகின்றமை.

இந்த திக்ர் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஒரு காரணம். இங்கு பாவங்கள் மன்னிக்கப்படுதல் என்பதற்கான பொருள் சிறிய பாவம் மன்னிக்கப்படுவதைக் குறிக்கும். பெரிய பாவங்கள் தவ்பாச் செய்யாது மன்னிக்கப்படாது.

التصنيفات

தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகள்