இமாம் தொழுகையில் ஒரு நிலையில் இருக்கும் போது நீங்கள் வந்தால் இமாம் செய்வதைப் போன்றே செய்யட்டும்.

இமாம் தொழுகையில் ஒரு நிலையில் இருக்கும் போது நீங்கள் வந்தால் இமாம் செய்வதைப் போன்றே செய்யட்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ பின் அபீதாலிப் (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோர் கூறுகின்றனர் : "இமாம் தொழுகையில் ஒரு நிலையில்இருக்கும்போது நீங்கள் வந்தால் இமாம் செய்வதைப் போன்றே செய்யட்டும்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

இமாம் நிலை, ருகூஃ, ஸுஜூது, இருப்பு எந்த நிலையில் இருக்கும் போது வந்தாலும் அதே நிலையில் இமாமுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். சில பாமரர்கள் செய்வது போல் இமாம் நிலைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.

فوائد الحديث

தொழுகையில் இமாம் எந்த நிலையில் இருக்கின்றாரோ அதிலேயே பிந்தி வருபவர் இணைந்து கொள்ள வேண்டும். இதில் ருகூஃ, ஸுஜூது, இருப்புகளுக்கு இடையில் வேறுபாடில்லை.

ஏனைய நபிமொழிகளில் உள்ளதைப் போன்று இமாம் ருகூஃவிலிருக்கும் போது சேர்ந்தால் மாத்திரமே அந்த ரக்அத் கணிக்கப்படும்.

التصنيفات

இமாம் மற்றும் மஃமூமின் சட்டங்கள்