முஸ்லிமான ஒருவர் தன் சகோதரருக்காக மறைவாக கேட்கும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். பிரார்த்திக்கும் அந்த…

முஸ்லிமான ஒருவர் தன் சகோதரருக்காக மறைவாக கேட்கும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். பிரார்த்திக்கும் அந்த மனிதரின் தலையருகே நியமிக்கப்பட்ட ஒரு வானவர் இருப்பார்.பிரார்த்தனை செய்யும் அம்மனிதர் தனது சகோதரருக்காக நல்லதை வேண்டும் போதெல்லாம் நியமிக்கப்பட்ட அவ்வானவர் ஆமீன் எனக் கூறி உனக்கும் இது போலவே கிடைக்கட்டும் என்று கூறுவார்.

நபியவர்கள் கூறியதாக உம்மு தர்தா ரழி அன்ஹா அறிவிக்கிறார்கள் முஸ்லிமான ஒருவர் தன் சகோதரருக்காக மறைவாக கேட்கும் பிரார்த்தனை ஏற்றுக்;கொள்ளப்படும்.பிரார்த்திக்கும் அந்த மனிதரின் தலையருகே நியமிக்கப்பட்ட ஒரு வானவர் இருப்பார்.பிரார்த்தனை செய்யும் அம்மனிதர் தனது சகோதரருக்காக நல்லதை வேண்டும் போதெல்லாம் நியமிக்கப்பட்ட அவ்வானவர் ஆமீன் எனக் கூறி "உனக்கும் இது போலவே கிடைக்கட்டும்" என்று கூறுவார்

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஒரு முஸ்லிம் தனது சகோதரருக்காக அவர் அறியாத விதத்தில் கேட்டும் பிரார்த்தனை அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.அவர் தனது சகோதரருக்காக இறைஞ்சும் போது வானவர்களில் ஒருவர் அவரின் தலையருகே இருந்து கொண்டு ஆமீன் கூறி "உனது சகோதரருக்கு கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்த அந்த நன்மை உனக்கும் கிடைக்கட்டுமாக" என கூறுகிறார்.

التصنيفات

வானவர்கள் மீது விசுவாசம் கொள்ளல், பிரார்த்தனையின் சிறப்புகள்