பறட்டைத் தலையும் புழுதியும் படிந்த நிலையி்ல் வீட்டு வாயல்களில் விடப்பட்டோர் பலர் இவர்கள் எதையேனும்…

பறட்டைத் தலையும் புழுதியும் படிந்த நிலையி்ல் வீட்டு வாயல்களில் விடப்பட்டோர் பலர் இவர்கள் எதையேனும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் அதனை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்.

"பறட்டைத் தலையும் புழுதியும் படிந்த நிலையி்ல் வீட்டு வாயல்களில் விடப்பட்டோர் பலர் இவர்கள் எதையேனும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் அதனை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்" என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

வறுமையின் காரணமாக தலயைில் எண்ணை தேய்க்காது அதனை சீவி சிங்காரிக்காது பறட்டைத் தலையுடனும்,புழுதி படிந்த ஆடையுடனும் இருக்கின்ற பலர்,அவர்களை மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாததின் காரணமாக அவர்களைத் தங்கள் வீடுகளில் ஏற அவர்கள் அனுமதிப்பதில்லை.அதனால் அவர்கள் வீட்டு வாயல்களில் தடுத்து வைக்கப்படு கின்றனர் இவ்வாறு மக்களிடம் அவர்கள் மதிப்பற்றவர்களாக இருந்த போதிலும் அவர்கள் அல்லாஹ்விடம் மதிப்புள்ளவர்களாக இருக்கின்றனர்.எனவே அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு "அல்லாஹ்வின் மீது ஆணையாக இது நடவாது" என்று கூறுவார்களாயின் அது நடவாது மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக இது நிகழும் என்று அவர் கூறினால் அது நிமழ்ந்து விடும்.இது அவர்களுக்கு அல்லாஹ்விடம் நல்ல கௌரவமும் அந்lதஸ்த்தும் இருக்கின்ற காரணத்தினாலாகும்.அல்லாஹ்விடம் மனிதனின் கௌரவம் மதிப்பிடப்படுவது அவனின் தக்வா எனும் இறை பக்தியின் அடிப்படையிலாகும்."உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றனரோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர்"(49:13).என்று அல்லாஹ் கூறுகிறான்.எனவே எவர் மிக இறையச்சம் உடையவராக இருப்பாரோ,அவர் அல்லாஹ்விடம் மிக கண்ணியம் உடையவராக இருப்பார்.மேலும் அவரின் காரியங்களை அல்லாஹ் இலகு படுத்துவான்,அவரின் பிரார்த்தனைகளை அங்கீகரிப்பான்,அவரின் கேடுகளை நீக்குவான்.மேலும் அவர் செய்த சத்தியத்தை செல்லுபடியாக்குவான்.எனினும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ள அவர்கள் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற,அனுமதித்த விடயங்களையே அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு வேண்டுவார்கள்

التصنيفات

நல்லமல்களின் சிறப்புகள்