إعدادات العرض
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறுதி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் எனது கனவுடன்…
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறுதி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் எனது கனவுடன் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமழானின்) இறுதி ஏழு (இரவு)களில் தேடிக் கொள்ளட்டும்!' என்று கூறினார்கள்
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்துள்ளார்கள்: நபித்தோழர்களில் சிலர், கனவில் (ரமழானின்) இறுதி ஏழு (இரவு)களில் ஒன்றில் 'லைலத்துல் கத்ர்' எனும் கண்ணிய மிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பற்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறுதி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் எனது கனவுடன் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமழானின்) இறுதி ஏழு (இரவு)களில் தேடிக் கொள்ளட்டும்!' என்று கூறினார்கள்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Português Kurdî සිංහල Kiswahili Tiếng Việt অসমীয়া ગુજરાતી Hausa Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ಕನ್ನಡ Svenska Македонски ไทย Українська తెలుగు मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Malagasy ភាសាខ្មែរ پښتو Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களில் சிலருக்கு லைலத்துல் கத்ர் ரமழானின் கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக ஒரு கனவில் காட்டப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ' லைலத்துல் கத்ர் இரவு கடைசி ஏழு இரவுகளில் ஒன்றில் நிகழும் என்பதை உங்கள் கனவுகள் ஒருமித்துக் காட்டி நிற்கிறது. எனவே, லைலத்துல் கத்ரைக் அடைய விரும்புபவர், கடைசி ஏழு இரவுகளில் அதை விடாமுயற்சியுடன் தேடட்டும்.' என நபி (ஸல்) அவர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். லைலத்துல் கத்ர் இரவு ரமழானின் கடைசி பத்து இரவுகளில், குறிப்பாக கடைசி ஏழு இரவுகளில் இருக்க வாய்ப்புள்ளது. ரமழான் மாதம் 30 நாட்கள் என்றால், கடைசி ஏழு இரவுகள் 24 வது இரவில் இருந்து தொடங்குகின்றன. ரமழான் மாதம் 29 நாட்கள் என்றால், அவை 23 வது இரவில் இருந்து தொடங்குகின்றன. நபி (ஸல்) அவர்கள் நம்மை அதிக நல்ல செயல்களைச் செய்யவும், அல்லாஹ்வை நினைவில் கொள்ளவும், இந்த இரவுகளில் அதிகமாக பிரார்த்தனை செய்யவும் ஊக்குவித்தார்கள்.فوائد الحديث
லைலத்துல் கத்ரின் மகத்துவமும்; அதைத் தேட மக்களை ஊக்கப்படுத்தியுள்ளமையும்.
லைலத்துல் கத்ர் இரவை தேடி, மக்கள் வணக்கவழிபாடுகளில் ஆழ்ந்து ஈடுபட்டு தங்களது நன்மைகளை அதிகரித்துக் கொள்ளவதற்காக அந்த புனிதமிகு இரவை மறைத்து வைத்துள்ளான் . இது அல்லாஹ்வின் ஞானம் மற்றும் கருணை சார்ந்த விடயமாகும்.
லைலத்துல் கத்ர் ரமழானின் கடைசி பத்து இரவுகளில், ஒற்றைப்படை இரவுகளில் (21, 23, 25, 27 மற்றும் 29ல்) நிகழ்வதற்கு பெரும் வாய்ப்புள்ளது.
லைலத்துல் கத்ர் என்பது ரமழானின் கடைசி பத்து இரவுகளில் ஒன்றாகும். இந்த இரவில்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளினான். இந்த இரவானது அது கொண்டிருக்கும் பரக்கத்தினாலும், மிகப் பெரும் கண்ணியத்தினாலும், அதில் செய்யப்படும் நற்காரியங்களின் விளைவாலும் ஆயிரம் மாதங்களை விட மிகவும் சிறந்ததாகும்.
இந்த இரவானது 'கண்ணியமிக்க இரவு' (லைலத்துல் கத்ர்) என்ற பெயரால் அழைக்கப்படுவதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. '
1. கத்ர் என்ற சொல்லுக்கான கருத்து 'மதிப்பு, கௌரவம் என்ற அடிப்படையிலாகும் 'கத்ர்' என்ற சொல்லை அறபு மொழியில் உயர்தினையுடன் பாவிக்கும் 'மரியாதை', 'கௌரவம்', 'அந்தஸ்து'. என்ற கருத்தில் பாவிப்பர் அறபு மொழியில் 'புலானுன் அழீமுல் கத்ரி' என்று கூறுவர் அதன் கருத்து 'சிறந்த அந்தஸ்தில் இருப்பவர் 'சிறந்த அந்தஸ்து உள்ளவர்' என்று கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் கத்ர் என்ற சொல்லை அடைமொழியாக பாவிப்பவர் அந்த வகையில் இங்கே லைலத்துல் கத்ர் என்பது என்றால் 'கௌரவமான இரவு', 'மதிப்புமிக்க இரவு' என்று பொருளாகும். அல்குர்ஆன் இதனை பின்வருமாறு விவரிக்கிறது. நாம் அதை (குர்ஆனை) ஒரு புனிதமிகு இரவில் இறக்கினோம் (சூறத்துத் துஹான்: 3)
2. லைலத்துல் கத்ர் என்பது தக்தீர் என்ற கருத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டிருக்க முடியும். அந்தவகையில் 'கத்ர்' என்பதற்கு ஆணை, கட்டளை விதி, முடிவு முதலான கருத்துக்கள் உண்டு. இந்த அடிப்படையில் கருத்துக் கொள்வோமாயின் இறைவிதி தீர்மானிக்கப்படும் இரவு அதாவது எதிர்வரும்; ஆண்டில் நடக்கும் அனைத்து விஷயங்களும் தீர்மானிக்கப்படும் இரவு என்பதாகும். இதற்கான ஆதாரமாக பின்வரும் வசனம் உள்ளது 'அந்த இரவில், ஒவ்வொரு அறிவு விஷயமும் தீர்மானிக்கப்படுகிறது' (சூறத்துத் துஹான்)
التصنيفات
ரமழானின் இறுதிப் பத்து