إعدادات العرض
'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ள மாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான்.…
'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ள மாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ள மாட்டான் என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அவன் யார்? அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கேட்கப்பட்ட போது, 'எவனுடைய தீமைகளை விட்டும் அண்டைவீட்டான் அபயம் பெற வில்லையோ அவன் தான்' என்று கூறினார்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ள மாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ள மாட்டான் என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அவன் யார்? அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கேட்கப்பட்ட போது, 'எவனுடைய தீமைகளை விட்டும் அண்டைவீட்டான் அபயம் பெற வில்லையோ அவன் தான்' என்று கூறினார்கள்.
الترجمة
العربية Tiếng Việt অসমীয়া Nederlands Indonesia Kiswahili Hausa සිංහල English ગુજરાતી Magyar ქართული Română Русский Português ไทย తెలుగు मराठी دری Türkçe አማርኛ বাংলা Kurdî Malagasy Македонски Tagalog ភាសាខ្មែរ Українська ਪੰਜਾਬੀ پښتو Wolof Moore हिन्दी മലയാളം Svenska Bosanski 中文الشرح
இங்கு நபியவர்கள் மூன்று தடவை சத்தியம் செய்து, உறுதிப்பட. 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான்.' என்று கூறுகின்றார்கள். அப்போது நபித்தோழர்கள் அவர்களிடம், 'அவன் யார்? அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கேட்ட போது, 'எவனுடைய தீமைகளையும், சதியையும், அநியாயத்தையும் விட்டு அண்டைவீட்டான் அபயம் பெறவில்லையோ அவன் தான்' என்று கூறினார்கள்.فوائد الحديث
அண்டைவீட்டானுக்கு தனது தீங்காலும், அநீதத்தாலும் அச்சத்தை ஏற்படுத்துபவனிடம் ஈமான் இல்லை என்று கூறியிருப்பது, அது ஒரு பெரும் பாவம் என்பதையும், அவ்வாறு செய்பவர் ஈமானில் குறையுள்ளவர் என்பதையும் அறிவிக்கின்றது.
அண்டைவீட்டாருக்கு உபகாரம் புரிவதை அதிகம் வலியுறுத்துதல். மேலும், சொற்களாலோ, செயற்களாலோ அவருக்கு தீங்கிழைக்காமல் இருத்தல்.
