إعدادات العرض
சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று கூறி பின்வருமாறு அறிவுரை கூறினார்கள் : அல்லாஹ்வை நீ…
சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று கூறி பின்வருமாறு அறிவுரை கூறினார்கள் : அல்லாஹ்வை நீ மனதிற் கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வை மனதிற் கொள். நீ அவனை உன் முன் காண்பாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுனால் அல்லாஹ்விடமே உதவிதேடு
அபுல் அப்பாஸ் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒருநாள் நான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் என்னிடம் : சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று கூறி பின்வருமாறு அறிவுரை கூறினார்கள் : அல்லாஹ்வை நீ மனதிற் கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வை மனதிற் கொள். நீ அவனை உன் முன் காண்பாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுனால் அல்லாஹ்விடமே உதவிதேடு. இந்த உலகமே ஒன்று திரண்டு வந்து உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும், அல்லாஹ் ஏற்கனவே உனக்கு எழுதி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் செய்திட முடியாது. இன்னும் இந்த உலகமே ஒன்று திரண்டு வந்து உனக்கு தீங்கிழைத்திட முயன்றாலும், அது அல்லாஹ் உனக்கு ஏற்கனவே எழுதிவைத்துள்ளதை தவிர வேறு எந்த தீங்கையையும் ஏற்படுத்திட முடியாது. விதிகள் எழுதப்பட்ட எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. விதிகள் எழுதப்பட்ட ஏடுகளும் காய்ந்து விட்டன". திர்மிதி தவிர்ந்த பிறிதொரு நபிமொழித் தொகுப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது : அல்லாஹ்வை மனதிற் கொள்ளுங்கள். நீங்கள் அவனை உங்கள் முன் காண்பீர்கள். நீங்கள் செழிப்பாக இருக்கும் போது அல்லாஹ்வை நினையுங்கள். அவன் நீங்கள் கஷ்டத்தில் இருக்கும் போது உங்களை நினைவு கூர்வான். அறிந்து கொள்வீர்களாக : உங்களுக்குக் கிட்டாமல் சென்றவை உங்கள் மீது உங்களுக்கு விதிக்கப் படவில்லை. உங்களுக்குக் கிட்டியவைகள் உங்களைக் கடந்து சென்று விடும்படி விதிக்கப் படவில்லை. பொறுமையுடன் வெற்றி வரும். துன்பத்துடன்தான் விடிவு கிடைக்கும் கஷ்டத்துடன் தான் இலகு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
الترجمة
العربية Español አማርኛ English اردو Indonesia বাংলা Français Türkçe Русский Bosanski සිංහල हिन्दी 中文 فارسی Tiếng Việt Tagalog Kurdî Hausa Português മലയാളം తెలుగు Kiswahili မြန်မာ ไทย Deutsch پښتو অসমীয়া Shqip Nederlands ગુજરાતી Кыргызча नेपाली Lietuvių دری Српски тоҷикӣ Kinyarwanda Română Magyar Čeština Moore Malagasy Oromoo ಕನ್ನಡ Wolof Azərbaycan O‘zbek Українська ქართული Македонски ភាសាខ្មែរ Bambara ਪੰਜਾਬੀ मराठी Kirundi Kurmancî Bahasa Melayuالشرح
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சிறுவராக இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் சவாரி செய்கையில் நான் உமக்கு பயனுள்ள சில விடயங்களை கற்றுத் தரப்போகிறேன், அல்லாஹ் அதனை பயனுள்ளதாக ஆக்கித்தர வேண்டும் என அவரிடம் கூறினார். அல்லாஹ்வின் ஏவல்களைப் பேணி விலக்கள்களை தவிரந்து நடப்பதன் மூலம் அல்லாஹ்வை பேணி நடப்பீராக. அதாவது உன்னை அவன் வழிபாட்டிலும் வணக்கங்களிலும் காண வேண்டும். பாவத்திலும் குற்றங்களிலும் காணக்கூடாது. அவ்வாறு நடந்து கொண்டால் உம்மை அல்லாஹ் இம்மை, மறுமை பேராபத்திலிருந்து பாதுகாப்பது உமக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும் கூலியாக அமைந்துவிடும். அதே போல் நீ எங்கு சென்றாலும் உமது காரியங்களில் அவன் ஒத்தாசை வழங்குவான். நீ ஏதாவது ஒன்றை கேட்டால் அல்லாஹ்விடமே கேள், அவன்தான் கேட்போரின் கோரிக்கைகளை ஏற்று பதிலளிப்பவனாக உள்ளான். உமக்கு உதவி தேவைப்பட்டால் அல்லாஹ்விடம் மாத்திரமே உதவி கோருவீராக. ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உமக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உமக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உமக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உமக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது என்ற ஆழமான நம்பிக்கை கொண்வராக இருப்பீராக! இந்த விவகாரத்தை அல்லாஹ் அவனின் அறிவிற்கும், ஞானத்திற்கும் ஏற்ப அவனே தீர்மானித்து எழுதிவிட்டான். ஆகவே அவனால் விதித்து எழுதப்பட்டவற்றை மாற்ற முடியாது. அல்லாஹ்வின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், அவனது தடைகளைத் தவிர்ப்பதன் மூலமும் எவர் அல்லாஹ்வைப் பாதுகாக்கிறாரோ, அப்போது அல்லாஹ், தன் அடியாரின் முன் இருந்து, அவனுடைய நிலையை அறிந்து உதவி செய்து அவனுக்கு எல்லா வகையிலும் ஒத்தாசையாக இருக்கிறான். ஒருவன் செழிப்பான- வசதியாக இருக்கும்- நிலையில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அல்லாஹ் கஷ்டமான காலங்களில் அவனுக்குரிய விடிவையும், கஷ்டத்திலிருந்து வெளியேறுவதற்கான வழியையையும் ஏற்படுத்துவான். ஒவ்வொரு அடியானும் அல்லாஹ் அவனுக்கு விதித்த நன்மை தீமைகளில் திருப்தி அடையட்டும். கஷ்டங்கள் மற்றும் துன்பமான நிலைகலில் , அடியான் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் ஏனென்றால் பொறுமைதான் விடிவுக்கான திறவுகோலாகும் துன்பம் கடுமையாகும்போது, அல்லாஹ்விடமிருந்து விடிவு கிடைக்கும், கஷ்டம் ஏற்பட்டால் அதனைத் தொடர்ந்து அல்லாஹ் இலகுவை ஏற்படுத்தித் தருவான்.فوائد الحديث
ஏகத்துவம் , ஒழுக்கங்கள் உள்ளிட்ட மார்க்க விடயங்களை குழந்தைகளுக்கும் இளம் சிறார்களுக்கும் கற்பிப்பதன் முக்கியத்துவம் இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது.
செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும்.
அல்லாஹ்வை மாத்திரமே சார்ந்து, அவனிடமே பொறுப்புச் சாட்டுமாறு ஏவப்பட்டுள்ளது, பொறுப்பாளிகளில் அவனே மிகச் சிறந்தவன்.
அல்லாஹ் அனைத்து விடயங்களையும் நிர்ணயித்துள்ளதால் கழா, கத்ரை (விதி) ஈமான் கொண்டு அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுதல்.
யார் அல்லாஹ்வின் மார்க்கத்தை-கட்டளையை- வீணடிக்கிறானோ அவனை அல்லாஹ் பாதுகாக்காது கைவிட்டுவிடுவான்;.
ஒரு மனிதனுக்கு கஷ்டம் ஏற்பட்டால் அதன்பின் இலகுவை எதிர்பார்க்கட்டும் என்ற மகத்தான நற்செய்தி இந்நபிமொழியில் உள்ளது.
சோதனைகள் ஏற்படும் போதும், விரும்பத்தகுந்த ஒன்றை இழக்கும் போதும் அடியானுக்கு பின்வரும் வார்த்தை ஆறுதலை அளிக்கின்றது : 'அறிந்து கொள்: உனக்குக் கிடைத்தவை, உனக்கு கிடைக்காது தவறிப்போக இருந்ததல்ல. உனக்கு கிடைக்காதுபோனவை உனக்கு கிடைக்கும் என்று விதிக்கப்பட்டிருந்ததல்ல '. மனம் விரும்பாதவை ஏற்படும் போது அதற்கு ஆறுதல் அளிப்பதாக முதலாவது கூற்றும், விரும்பந்தகுந்தவற்றை இழக்கும் போது அதற்கு ஆறுதலாக இரண்டாம் கூற்றும் உள்ளது.
