சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும்

சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள் அந்நாளில் தான் சுவர்க்கத்தினுள் தங்கவைக்கப் பட்டு அந்நாளில் தான் அதிலிருந்து வெளியேற்றவும் பட்டார்கள். அத்துடன் யுக முடிவு நாளும் ஜும்ஆத் தினத்தில்தான் நிகழும்'.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்த நாள் ஜும்ஆ தினமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இத்தினத்தின் சிறப்புகள் சில பின்வருமாறு : இந்நாளில் ஆதம் அலைஹிஸ்லாம் படைக்கப்பட்டமை. சுவர்க்கத்தினுள் நுழைவிக்கப்பட்டமை, அதிலிருந்து வெளியேற்றபட்டு பூமிக்கு இறக்கப்பட்டமை, இந்நாளில் யுகமுடிவு நிகழ்கின்றமை போன்றனவாகும்.

فوائد الحديث

கிழமை நாட்களில் ஏனைய நாட்களை விட ஜும்ஆத்தினத்தின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளமை.

ஜும்ஆத் தினத்தில் அதிமாக நற்காரியங்கள் செய்வதற்கும் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து விலகி அவனின் அருளைப் பெற்றுக்கொள்வதற்கு தயாரார்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்துதல்.

ஹதீஸில் குறிப்பிடப்பட ஜும்ஆத் தினத்திற்கான இந்தத் தனிச் சிறப்புகளைப் பொறுத்தவரை அவை அத்தினத்திற்கான சிறப்புகள் அல்ல என்ற ஒரு கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்ப்பட்டமை யுகமுடிவு நாள் நிகழ்தல் போன்றன குறிப்பிடப்பட்டதால் அந்நாளிக்கான சிறப்பம்சமாக இதனைக் கருத முடியாது. இன்னொரு கருத்து இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது: அனைத்தும் அந்நாளைக்குரிய சிறப்புக்களாகும், அதாவது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பூமிக்கு அனுப்பட்டமை ரஸுல்மார்கள் மற்றும் நபிமார்கள் சான்றோர் என சந்ததி உருவாவதற்கு காரணமாக அமைந்தமை சிறப்பாகும். அத்துடன் இத்தினத்தில் மறுமை நிகழ்தல் என்பது நல்லோருக்கான வெகுமதிகள் அவசரமாக கிடைப்பதற்கும் அல்லாஹ் அவர்களுக்கு தயார்ப்படுத்தியுள்ள அந்தஸ்த்துக்களை அடைந்து கொள்வதற்கு காரணமாக உள்ளது, இந்தவகையில் இங்கு குறிப்பிடப்பட்டவை அனைத்தும் இத்தினத்திற்கான சிறப்புக்களாக கொள்ள முடியும்.

இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட சிறப்பம்சங்கள் தவிர வேறு பல சிறப்பம்சங்களும் இத்தினத்திற்கு உண்டு அவை பின்வருமாறு : இத்தினத்தில்தான் ஆதம் அலை அவர்களின் தௌபா ஏற்றுக்கொள்ளப் பட்டமை, அவரின் உயிர் கைப்பற்றப்பட்டமை போன்றனவும் நிகழ்ந்துள்ளன. அத்துடன் இத்தினத்தில் ஒரு சிறப்பு நேரம் உண்டு அந்நேரத்தில் ஒரு இறைவிசுவாசி தொழுது கொண்டிருக்கும் போது அவன் கேட்கும் பிரார்த்தனை குறித்த நேரத்திற்கு இணையாக அமைந்து விட்டால் அவன் அவ்வேளையில் கேட்பதை அல்லாஹ் கொடுத்து விடுகிறான்.

வருட நாட்களில் மிகவும் சிறந்தது அறபா நாளாகும். ஆனால் யவ்முன் நஹ்ர் என்ற கருத்தும் உண்டு. கிழமை நாட்களில் ஜும்ஆத் தினமே மிகவும் சிறப்பான தினமாகும். இரவில் மிகவும் சிறப்புக்குரிய இரவு லைலத்துல் கத்ர் இரவாகும்.

التصنيفات

முன்சென்ற இறைத்தூதர்கள்