உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன்…

உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீத்தம் பழத்திற்குப் பேரீத்தம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்" என்று கூறினார்கள்" என்றார்கள்

மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் "(எம்மிடமுள்ள தங்கத்தை) வெள்ளி நாணயத்திற்கு மாற்றித் தருபவர் யார்?" என்று கேட்டபடி வந்தேன். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்கு அருகிலிருந்த தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள், "எங்கே) உமது தங்கத்தைக் காட்டும். அதைக் கொண்டு வாரும்! எம் ஊழியர் (வெளியூரிலிருந்து) வந்ததும் அதற்குரிய வெள்ளியைத் தருகிறோம்" என்று கூறினார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு வெள்ளியை (உடனடியாக)க் கொடுத்துவிடு. அல்லது அவரது தங்கத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீத்தம் பழத்திற்குப் பேரீத்தம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்" என்று கூறினார்கள்" என்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மாலிக் பின் அவ்ஸ்; என்ற தாபிஈ அவர்கள், தன்னிடம் சில தங்க தீனார்கள் இருந்ததாகவும், அவற்றை வெள்ளி திர்ஹம்களுக்கு மாற்றிக்கொள்ள விரும்பியதாகவும் கூறுகின்றார்கள். அப்போது தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், 'உங்கள் தீனார்களைத் தாருங்கள் பார்க்கலாம்' என்று கூறினார்கள். பின்பு அவர்கள் வாங்குவதாக முடிவெடுத்துவிட்டு, 'எமது பணியாள் வந்த பின்னர் வாருங்கள், நாம் உங்களுக்கு வெள்ளி திர்ஹம்களைத் தருவோம்' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களும் அந்த சபையில் இருந்தார்கள். அப்போது அவர்கள் இந்த வியாபார முறையைக் கண்டித்து, அபூ தல்ஹா இப்போதே அந்த வெள்ளியைக் கொடுக்கவேண்டும். அல்லது தங்கத்தைத் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்று சத்தியமிட்டுக் கூறிவிட்டுக் காரணத்தையும் விளக்கினார்கள். அதாவது, தங்கத்திற்கு வெள்ளியை விற்பதாக இருந்தாலும், வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதாக இருந்தாலும், உடனுக்குடனே விற்கவேண்டும். அவ்வியாபாரம் தடுக்கப்பட்ட வட்டியாகவோ, பிழையான வியாபாரமாகவோ இருக்கக்கூடாது. எனவே, தங்கத்தை தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும் உடனுக்குடன் விற்று, அவ்விடத்திலேயே மாற்றிக் கொள்ளவேண்டும். தொலி நீக்கப்பட்ட கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, பேரீத்தம்பழம் ஆகியவையும், ஒரே அளவில் நிறுக்கப்பட்டு, அல்லது ஒரே அளவாக அளக்கப்பட்டு, உடனுக்குடன் விற்கப்படவேண்டும். அவற்றில் எந்தவொன்றும் தவணை பிற்படுத்தி விற்க முடியாது. பொருட்களை மாற்றிக் கையகப் படுத்திக்கொள்ள முன்னர், பிரிந்து செல்ல முடியாது.

فوائد الحديث

இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள வகைகள் ஐந்தாகும் : தங்கம், வெள்ளி, தொலி நீக்கப்பட்ட கோதுமை, தொலி நீக்கப்படாதகோதுமை, பேரீத்தம்பழம் ஆகியவையே அவையாகும். இந்த ஒவ்வொரு வகைகளுக்கும் இடையில் பண்டமாற்று வியாபாரம் நடந்தால், அது செல்லுபடியாக இரு நிபந்தனைகள் அவசியம் : 1. வியாபாரம் நடக்கும் இடத்திலேயே இரு பொருட்களையும் கையகப்படுத்திக்கொள்ளல். 2. நிறையில் சமனாக இருத்தல். உதாரணமாக, தங்கத்திற்கு தங்கத்தை விற்பது போல. அவ்வாறில்லாவிட்டால், ரிபல் பழ்ல் (எனப்படும் அதிகப்படுத்தி எடுக்கம் வட்டி) ஆக மாறிவிடும். வகைகள் வேறுபட்டால், உதாரணமாக, கோதுமையைக் கொடுத்து தங்கத்தை எடுப்பது போன்று, இங்கு வியாபாரம் செல்லுபடியாவதற்கு ஒர நிபந்தனை உண்டு. அதாவது, பொருளைக் கொடுக்கும் அதே சபையில் அதன் பெறுமதியையும் பெற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறில்லா விட்டால், பிற்படுத்துவதினால் ஏற்படும் 'ரிபந் நஸீஆ' வாக அது மாறிவிடும்.

வியாபார ஒப்பந்த சபை என்பது, அந்த வியாபாரம் நடக்கும் இடமாகும். அங்கு அவர்கள் அமர்ந்தவர்களாக இருக்கலாம். அல்லது நடப்பவர்களாக இருக்கலாம். அல்லது வாகனத்திலும் இருக்கலாம். பிரிந்து செல்லல் என்று வரும் போது, மக்களது வழமையில் எதுவெல்லாம் பிரிந்துசெல்லலாகக் கணக்கிடப்படுமோ, அதைத் தான் கவனத்திற் கொள்ளப்படும்.

இந்த ஹதீஸில் வந்துள்ள தடை, அச்சிடப்பட்ட, அச்சிடப்படாத அனைத்து விதமான தங்கம் மற்றும் வெள்ளிகளையும் உள்ளடக்கிக்கொள்ளும்.

இக்காலத்தில் உள்ள பண நோட்டுக்களிலும், தங்கம், வெள்ளியூடாக வியாபாரம் செய்யும் போது கட்டாயமாகும் அம்சங்கள் கட்டாயமாகும். அதாவது, ரியாலை திர்ஹமால் மாற்றுவது போன்று, ஒரு நாணயத்தை இன்னொரு நாணயத்துடன் மாற்ற விரும்பினால் இரு தரப்பும் பொருந்திக்கொள்ளும் விதத்தில் விலையில் ஏற்றத்தாழ்வு வரலாம். ஆனால், வியாபார சபையிலேயே இருவரும் பணத்தைக் கையகப்படுத்திக்கொள்ளவேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அவ்வியாபாரம் செல்லுபடியற்றதாகி, அது ஒரு வட்டிக்கொடுக்கல் வாங்கலாக மாறிவிடும்.

வட்டிக்கொடுக்கல் வாங்கல்கள் கூடாது. இரு தரப்பும் உடன்பட்டாலும் அது செல்லுபடியற்றதாகவே இருக்கும். ஏனெனில், மனிதனதும், சமூகத்தினதும் உரிமைகளை – அவர்கள் விட்டுக்கொடுத்தாலும் - இஸ்லாம் பாதுகாக்கின்றது.

சக்தியுள்ளவர்கள், பாவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

உமர் (ரலி) அவர்கள் செய்துகாட்டியது போன்று, பாவங்களைத் தடுக்கும் போது ஆதாரங்களைக் கூறல்.

التصنيفات

வட்டி