கரண்டைக்காலை விட்டும் கீழே செல்லும் கீழாடை நரகிலேயே இருக்கும்

கரண்டைக்காலை விட்டும் கீழே செல்லும் கீழாடை நரகிலேயே இருக்கும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : கரண்டைக்காலை விட்டும் கீழே செல்லும் கீழாடை நரகிலேயே இருக்கும்.

[صحيح] [رواه البخاري]

الشرح

இதில் நபியவர்கள், ஆண்கள் தமது உடம்பின் கீழ்ப் பகுதியில் அணியும் காற்சட்டை போன்ற எந்த ஆடையையும் கரண்டைக் கால்களுக்குக் கீழால் அணிவதை விட்டும் எச்சரிக்கின்றார்கள். அதற்கான தண்டனையாக, அவ்வாறு கீழாடைகளை அணிபவர்களது கரண்டைக் காலுக்குக் கீழால் உள்ள பாதம் போன்றவை நரகத்திலேயே இருக்கும்.

فوائد الحديث

ஆண்கள் கரண்டைக் கால்களுக்குக் கீழால் வரை ஆடைகளை நீட்டி அணிவது தடுக்கப்பட்டுள்ளமை. மேலும் அது பெரும்பாவமாகவும் உள்ளமை.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : நிர்ப்பந்தத்திற்காக கரண்டைக்காலுக்கு கீழால் அணிவது இந்தத் தடையில் இருந்து விதிவிலக்களிக்கப்படும். உதாரணமாக, ஒருவருடைய கரண்டைக்கால்களில் காயங்கள் போன்றவை இருந்து, கீழாடையால் அதனை மறைக்கா விட்டால் கொசு போன்றவை நோவினை தரும் என்றிருந்தால், வேறு வழி இல்லாதபோது அவ்வாறு செய்யலாம்.

இது ஆண்களுக்கு மாத்திரம் உரிய சட்டமாகும். ஏனெனில், பெண்கள் தமது ஆடைகளை ஒரு முழம் அளவு கரண்டைக்காலுக்குக் கீழால் தாழ்த்திக் கொள்ளுமாறு ஏவப்பட்டுள்ளார்கள்.

التصنيفات

ஆடையும் அலங்காரமும்