நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்து கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும் சுத்தம் செய்யும் போதும் தம்…

நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்து கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்து வேலைகளிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்

உம்முல் முஃமினீன ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்து கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்து வேலைகளிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கௌரவமான அனைத்து நல்ல விடயங்களிலும்; வலதைக் கொண்டு ஆரம்பிப்பதை மிகவும் விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறான விடயங்கள் வருமாறு : தனது பாதணியை காலில் அணியும் போதும், தனது தலை முடி மற்றும் தாடியை வாரும் போதும் அவை இரண்டிற்கும் எண்ணைத் தேய்த்து உலர்த்தும் போதும், வுழுச்செய்யும் போது கைகளையும் கால்களையும் கழுவுவதிலும் வலது பக்கத்தால் தொடங்குவார்கள்.

فوائد الحديث

இமாம் நவவி அவர்கள் கூறுகிறார்கள்: இது ஷரீஆவில் காணப்படுகின்ற நிலையான ஒரு சட்ட விதியாகும் : ஆடை, கீழ் ஆடை மற்றும் செருப்பு அணிவது, மஸ்ஜிதில் நுழைவது, ஸிவாக் (பல் குச்சி) பயன்படுத்துவது, சுர்மா பூசுவது, நகங்களை வெட்டுவது, மீசையை வெட்டுவது, முடியை சீவுவது, அக்குள் முடியை பிடுங்குவது, தலையை மொட்டையடிப்பது, தொழுகையில் ஸலாம் கொடுப்பது, வுழுவின் உறுப்புகளை கழுவுவது, கழிவறையை விட்டு வெளியேறுவது, சாப்பிடுவது மற்றும் குடிப்பது, கைகுலுக்குவது, ஹஜருல் அஸ்வத் கல்லை தொடுவது போன்ற கௌரவமான எந்தவொரு செயலையும் செய்யும்போது வலது பக்கத்திலிருந்து தொடங்குவது வரவேற்கத்தக்க விடயமாகும். கழிவறைக்குள் நுழைவது, மஸ்ஜிதை விட்டு வெளியேறுவது, மூக்கை சீறுவது, இஸ்தின்ஜா (மல, சலம் கழித்த பிறகு சுத்தம் செய்து கொள்வது), ஆடை, கால் சட்டை மற்றும் செருப்புகளை கழற்றுவது போன்ற செயல்களைப் பொறுத்தவரை, இடது பக்கத்திலிருந்து தொடங்குவது முஸ்தஹப்பாகும் -விரும்பத்தக்கதாகும். அத்துடன் இவை அனைத்தும் வலதை முற்படுத்துவதன் சிறப்பையும் உயர்வையும் குறித்து நிற்கிறது.

'நபி (ஸல்) அவர்கள் வலது பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பினார்கள்' என்பது வலது கை, வலது கால் மற்றும் வலது பக்கத்தால் செயல்களைத் தொடங்குவதையும், வலது பக்கத்திலிருந்து எதையும் பெறுவதையும் உள்ளடக்கியது

இமாம் நவவி அவர்கள் கூறுகிறார்கள்: வுழுவின் போது கழுவ வேண்டிய உறுப்புகளில் காதுகள், முன்னங்கைகள் மற்றும் கன்னங்கள் போன்ற சில பகுதிகளைக் கழுவும்போது வலது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பது முஸ்தஹப் அல்ல (வரவேற்கத்தக்கதல்ல) என்பதை அறிந்து கொள்ளுங்கள். இவைகளை ஒரே நேரத்தில் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கை உள்ள ஒருவர் அல்லது இரு கைகளையும் பயன்படுத்துவது சிரமம் என்று இருக்கும் ஒருவர் ஒரே தடவை இவ்வுறுப்புக்களை கழுவுவது சாத்தியமில்லை என்பதால் அவர் வலது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும்.

التصنيفات

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஆடை, நபி வழி