தன் மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவனாவான்

தன் மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவனாவான்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: தன் மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவனாவான்.

[حسن] [رواه أبو داود والنسائي في الكبرى وأحمد]

الشرح

தன் மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்ளும் கணவன் இறையருளில் இருந்து விரட்டப்பட்ட, சாபத்திற்குறியவன் எனக் கூறி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். அது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.

فوائد الحديث

மனைவியரின் பின் துவாரத்தில் உறவுகொள்வது தடுக்கப்பட்டுள்ளது.

மனைவியின் உடலில், பின் துவாரம் தவிர்ந்த ஏனையவற்றில் இன்பம் காண்பது அனுமதிக்கப்பட்டது.

ஒரு முஸ்லிம் அல்லாஹ் ஏவிய பிரகாரம், தன் மனைவியின் முன் துவாரத்திலேயே உறவு கொள்வான். பின் துவாரத்தில் உறவுகொள்வது, இயல்புநிலையை நாசப்படுத்துகின்றது. பிள்ளைபெறுவதற்கான விந்தை வீணடிக்கின்றது. ஈடேற்றமான இயல்புகளுக்கு முரண்படுகின்றது. கணவன், மனைவி இருவருக்குமே மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.

التصنيفات

திருமணத்தின் ஒழுங்குகள்