எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்.…

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது பள்ளியில் தொழுவதன் சிறப்பை இந்த ஹதீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதாவது இந்த உலகத்தில் உள்ள பள்ளிகளில் தொழும் தொழுகைக்கு கிடைக்கும் கூலியை விடவும் மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது ஆயிரம் தொழுகைக்குரிய கூலியைவிடவும் அதிகம் நன்மைகளை பெற்றுத்தரவல்லது. மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மஸ்ஜிதுன் நபவியில் தொழுவதை விடவும் அதிகம் நன்மையை பெற்றுத்தரவல்லது.

فوائد الحديث

அல் மஸ்ஜிதுல் ஹராமிலும் மஸ்ஜிதுன் நபவியிலும் தொழுவதற்கான நன்மை இரட்டிபாக்கப் பட்டிருத்தல்.

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது ஏனைய பள்ளிவாயில்களில் ஒரு இலட்சம் தொழுகைகளை தொழுவதை விடவும் சிறப்புக்குறியது.

التصنيفات

பள்ளிவாயிலின் சட்டங்கள்