'நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு 'ஸாஉ' முதல் ஐந்து 'முத்'து வரையிலான தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு 'முத்'து…

'நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு 'ஸாஉ' முதல் ஐந்து 'முத்'து வரையிலான தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு 'முத்'து அளவுத் தண்ணீரில் வுழுச் செய்வார்கள்.'

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு 'ஸாஉ' முதல் ஐந்து 'முத்'து வரையிலான தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு 'முத்'து அளவுத் தண்ணீரில் வுழுச் செய்வார்கள்.'

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு ஸாஅ' முதல் ஐந்து முத் வரையிலான தண்ணீரைக் கொண்டு ஜனாபத்திலிருந்து தூய்மைபெற பயன்படுத்துபவர்களாக இருந்தார்கள். அதே வேளை அவர்கள் ஒரு முத் தண்ணீரைக் கொண்டு வுழுச் செய்வார்கள். ஒரு ஸாஃ' என்பது நான்கு முத் ஆகும். ஒரு முத் என்பது சராசரி உடல் எடை கொண்ட ஒருவரின் இரண்டு உள்ளங்கைகளின் அளவாகும்.

فوائد الحديث

தண்ணீர் தாராளமாக இருந்தாலும், வுழு மற்றும் குளிப்பின் போது தண்ணீரை வீண்விரயம் செய்யாது சேமிக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.

வுழு மற்றும் குளிப்பின் போது தண்ணீரை முடிந்த வரை குறைவாகவும், தேவையான அளவு பயன்படுத்துவது விரும்பத்தக்கது என்பது பரிந்துரைக்கப்படுகிறது. இது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும் :

இந்த ஹதீஸின் கருத்தாவது, வுழு மற்றும் குளிப்பின் சுன்னத்துக்களையும் ஒழுக்கங்களையும் பேணி, தண்ணீரை வீணாக்காமல் அல்லது கஞ்சத்தனமாக பயன்படுத்தாமல், நேரம் மற்றும் தண்ணீரின் மிகுதியையும் பற்றாக்குறையையும் கருத்திற்கொண்டு, வுழு மற்றும் குளியலை முழுமையாகச் செய்வதாகும்.

ஜனாபத் என்பது: விந்து வெளியேறிய அல்லது உடலுறவில் ஈடுபட்ட அனைவருக்கும் பொதுவாக கூறப்படும் ஒரு வார்த்தையாகும். ஜனாபத் நிலையில் இருப்பவர் தொழுகையிலிருந்தும் பிற வழிபாடுகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்பதால் இது அவ்வாறு அழைக்கப்படுகிறது.

ஸாஃ என்பது : நன்கு அறியப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும். இங்கு நபியவர்களின் ஸாஉ முறையை இது குறிக்கிறது, இது நல்ல கோதுமையில் 480 மிஸ்கால் அல்லது 3 லிட்டர் எடையைக்கொண்டதாக இருக்கும்.

முத் என்பது ஒரு இஸ்லாமிய ஷரீஆ ரீதியிலான ஒரு அளவீட்டு அலகு. இது ஒரு சீரான உடல் எடை கொண்ட நபரின் இரண்டு உள்ளங்கைகளில் நிரப்பி விரிக்கும் போது ஏற்படும் அளவைக் குறிக்கிறது,. முத் என்பது ஒரு ஸாஉவின் நான்கில் ஒரு பகுதியாகும் என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் ஒருமித்த கருத்துள்ளது. இதன் அளவு பொதுவாக 750 மில்லிலிட்டர்கள் ஆகும்.

التصنيفات

வுழூவின் சுன்னாக்களும் ஒழுங்குகளும்