إعدادات العرض
எந்தவொரு மனிதருக்கும், அல்லாஹ் விதித்துள்ள ஒரு தண்டனைகளிலேயே தவிர, பத்துக் கசையடிகளுக்கு மேலால்…
எந்தவொரு மனிதருக்கும், அல்லாஹ் விதித்துள்ள ஒரு தண்டனைகளிலேயே தவிர, பத்துக் கசையடிகளுக்கு மேலால் அடிக்கக்கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக, அபூ புர்தா அல் அன்ஸாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எந்தவொரு மனிதருக்கும், அல்லாஹ் விதித்துள்ள ஒரு தண்டனைகளிலேயே தவிர, பத்துக் கசையடிகளுக்கு மேலால் அடிக்கக்கூடாது.
الترجمة
العربية Bosanski English Español فارسی Indonesia Русский Türkçe اردو 中文 हिन्दी Hausa Português മലയാളം Kurdî Tiếng Việt অসমীয়া Kiswahili Nederlands ગુજરાતી සිංහල Magyar ქართული Română ไทย తెలుగు मराठी دری አማርኛ বাংলা Malagasy Македонски Tagalog Українська ភាសាខ្មែរ ਪੰਜਾਬੀ پښتو Svenska Wolof Moore ಕನ್ನಡ Српски မြန်မာ Shqipالشرح
இங்கு நபியவர்கள் ஒரு மனிதருக்கு பாவங்களுக்காகவே தவிர, பத்துக் கசையடிகளுக்கு மேலால் அடிக்கக் கூடாது எனத் தடுக்கின்றார்கள். இங்கு, கசையடி அல்லது அடித்தல் அல்லது குறிப்பிட்ட தண்டனை என மார்க்கத்தில் வந்துள்ள தண்டனைகள் நாடப்படவில்லை. இதன் அர்த்தமாவது, மனைவி, பிள்ளைகளுக்கு அடித்தல் போன்ற ஒழுக்கமூட்டல் தண்டனைகளில் இவ்வாறு அதிகரிக்கக்கூடாது என்பதாகும்.فوائد الحديث
அல்லாஹ் ஏவியோ, தடுத்தோ விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பாதுகாப்பதற்கான தண்டனைகள் உண்டு. அவை ஒன்றில் மார்க்கமே விதித்தவையாக இருக்கும். அல்லது, அதன் அளவீடு ஆட்சியாளர் காணும் நலன்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
ஒழுக்கமூட்டல் (சார்ந்த தண்டனை) என்பது, அச்சமூட்டி, நெறிப்படுத்தும் அளவோடு இருக்க வேண்டும். எனவே, தேவையேற்படின் பத்துக் கசையடிகளுக்கு மேற்படாமல் அடிக்கலாம். ஆனாலும், அடிக்காமல், கற்பித்தல் மற்றும் நெறிப்படுத்தல் மூலமாக ஒழுக்கமூட்டுவதே மிகச் சிறந்ததாகும். கற்பித்தலில் அதுவே மிக மென்மையான நடைமுறையாகவும், ஏற்றுக் கொள்ளப்பட அதிக வாய்ப்புள்ள ஒன்றாகவும் உள்ளது. இது போன்ற சந்தர்ப்பங்களில் நிலைமைகள் பல்வேறுபட்டுக் காணப்படும். மிகப் பொருத்தமானதை செய்வது அவசியமாகும்.
التصنيفات
கண்டிப்பதன் சட்டங்கள்