எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து அம்சங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன

எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து அம்சங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து அம்சங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு மாத பயணத்ததூரத்தின் அளவு (என்னைப் பற்றிய) பயத்தைக் கொண்டு நான் உதவப்பட்டுள்ளேன். பூமி தொழுமிடமாகவும், சுத்தம் செய்யக் கூடிதாகவும் எனக்கு ஆக்கித் தரப்பட்டுள்ளது. எனவே, எனது சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் எந்த இடத்தில் தொழுகை நேரத்தை அடைந்து கொண்டாலும், தொழுது விடட்டும். போர்ச் செல்வங்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னர் யாருக்கும் அது ஹலாலாக இருக்கவில்லை. எனக்கு 'ஷபாஆ' எனும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. நபிமார்கள் தமது கூட்டத்திற்கு மாத்திரமே அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் எல்லா மனிதர்களுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளேன்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

தனக்கு முன்னர் வந்த எந்த நபிக்கும் கொடுக்கப் படாத, ஐந்து சிறப்புக்கள் தனக்கு வழங்கப் பட்டுள்ளதாக நபியவர்கள் அறிவிக்கின்றார்கள். முதலாவது, பயத்தைக் கொண்டு நான் உதவி செய்யப்பட்டுள்ளேன். எனது எதிரிகள் ஒரு மாதகாலம் பயணம் செய்யும் தூரத்தில் இருந்தாலும், அவர்களது உள்ளத்தில் என்னைப் பற்றிய பயம் போடப்பட்டிருக்கும். இரண்டாவது, பூமி எமக்குத் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது. நாம் எங்கிருந்தாலும் தொழலாம். நீரைப் பயன்படுத்த முடியாத போது, (பூமியில் உள்ள) மண், சுத்தத்தைத் பெற்றுத் தரும் ஒன்றாகவும் உள்ளது. மூன்றாவது, முஸ்லிம்கள், நிராகரிப்பாளர்களுடனான யுத்தத்தில் பெற்றுக் கொள்ளும் போர்ச்செல்வங்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. நான்காவது, மறுமையின் பயங்கர நிலையில் இருந்து மக்களுக்கு விடிவை வழங்குவதற்கான 'ஷபாஆ உழ்மா' எனப்படும் மாபெரும் பரிந்துரை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாவது, மனித, ஜின்கள் என எல்லாப் படைப்புக்களுக்கும் நான் நபியாக அனுப்பட்டுள்ளேன். அவர்களுக்கு முன்னர் இருந்த நபிமார்கள் அவ்வாறல்ல. அவர்கள் தமது சமுதாயத்திற்கு மாத்திரமே நபியாக அனுப்பப்படுவார்கள்.

فوائد الحديث

ஓர் அடியான், அடுத்தவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும், நன்றிசெலுத்தும் விதமாகவும் அல்லாஹ் தனக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளை கூறிக்கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சமுதாயத்தையும், அதன் நபியையும் அல்லாஹ் இவ்விடயங்கள் மூலம் சிறப்பித்துள்ளமை.

எந்த நிலையிலாவது, தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றுதல். தன்னால் இயன்றளவு, அதன் நிபந்தனைகளையும், அடிப்படை அம்சங்களையும், கடமைகளையும் நிறைவேற்றுவார்.

ஏனைய நபிமார்களுக்கல்லாது, நபியவர்களுக்கு மாத்திரம் உள்ள சிபாரிசுகள் பல வகைப்படும். 1. படைப்புக்களின் விசாரணையை ஆரம்பிக்குமாறு, அவர்களுக்காக பரிந்துரை செய்தல். 2. சுவனவாதிகள் சுவனம் நுழையப் பரிந்துரை செய்தல். 3. அபூ தாலிபுக்காக மாத்திரம், நரகில் இருந்து வெளியேற்றுமாறு அல்லாமல் தண்டனையைக் குறைக்குமாறு பரிந்துரை செய்தல். ஏனெனில் அவர் நிராகரிப்பாளராக மரணித்தார்.

இந்த ஹதீஸில் சொல்லப்படாத மேலும் பல சிறப்பம்சங்கள் நபியவர்களுக்குண்டு. உதாரணமாக, சுருக்கமான வார்த்தைகள் கொண்டு நிறைய அர்த்தங்களை உள்ளடக்கிப் பேசுதல். நபிமார்களில் இறுதியானவராக உள்ளமை, எமது வரிசைகள் மலக்குமார்களின் வரிசைகள் போன்றுள்ளமை போன்ற சிறப்பம்சங்கள்.

التصنيفات

நம் தூதர் முஹம்மத் (ஸல்)