அறிந்து கொள்ளுங்கள் இவ்வுலகமும் அதில் இருப்பவைகளும் சபிக்கப்பட்டவைகளாகும் ஆனால் அல்லாஹ்வைின்…

அறிந்து கொள்ளுங்கள் இவ்வுலகமும் அதில் இருப்பவைகளும் சபிக்கப்பட்டவைகளாகும் ஆனால் அல்லாஹ்வைின் தியானத்தையும் அதனுடன் தொடர்புடைய விடயங்களையும்,மற்றும் அங்குள்ள அறிஞர்களையும் அறிவைத் தேடுகிறவர்களையும் தவிர.

"அறிந்து கொள்ளுங்கள் இவ்வுலகமும் அதில் இருப்பவைகளும் சபிக்கப்பட்டவைகளாகும் ஆனால் அல்லாஹ்வின் தியானத்தையும் ,அதனுடன் தொடர்புடைய விடயங்களையும்,மற்றும் அங்குள்ள அறிஞர்களையும் அறிவைத் தேடுகிறவர்களையும் தவிர" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஹஸனானது-சிறந்தது] [இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார் - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் அவன் அல்லாஹ்வை வணங்க வேண்டும்,அவனின் ஷரீஆவை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே.இதை விட்டும் உலகிலுள்ள அழங்காரங்கள் யாவும் அவனை தூரமாக்குகின்றன,எனவே அவை யாவும் அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்கான வைகளாகவும்,அவனிடம் இழிவானவைகளாகவும் கருதப்படுகின்றன ஆனால் மனிதன்அல்லாஹ்வின் தியானத்தலும்,மற்றும் அது போன்று ஏனைய வழிபாடுகளிலும் ஈடுபட்டிருப்பதுவும்,மேலும் அவன் அறிவைக் கற்பதுவும் அதனைக்கற்றுக் கொடுப்பதுவும் அவன் சிருஷ்ட்டிக்கப்பட்டதன் நோக்கத்தைச் சார்ந்தது என்றபடியால் இவை அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்காக மாட்டாதது.

التصنيفات

உலக மோகத்தைக் கண்டித்தல்