ஓர் ஆணுடனோ, பெண்ணுடனோ பின் துவாரத்தில் உடலுறவு கொள்பவனை அல்லாஹ் பார்க்கவே மாட்டான்

ஓர் ஆணுடனோ, பெண்ணுடனோ பின் துவாரத்தில் உடலுறவு கொள்பவனை அல்லாஹ் பார்க்கவே மாட்டான்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ஓர் ஆணுடனோ, பெண்ணுடனோ பின் துவாரத்தில் உடலுறவு கொள்பவனை அல்லாஹ் பார்க்கவே மாட்டான்.

[صحيح] [رواه الترمذي والنسائي في الكبرى]

الشرح

ஒரு பெண்ணுடனோ, ஆணுடனோ பின் துவாரத்தில் உறவு கொள்பவனை அல்லாஹ் தனது அருட்பார்வை கொண்டு பார்க்கமாட்டான் எனவும், அது ஒரு பெரும் பாவம் எனவும் கடுமையான ஓர் எச்சரிக்கையை இங்கு நபியவர்கள் விடுக்கின்றார்கள்.

فوائد الحديث

ஓர் ஆண் இன்னோர் ஆணுடன் உறவுகொள்வது (ஓரினச் சேர்க்கை) பெரும்பாவமாகும்.

ஒரு பெண்ணுடன் பின் துவாரத்தில் உறவுகொள்வது பெரும்பாவமாகும்.

'அல்லாஹ் பார்க்கமாட்டான்' என்பதன் அர்த்தம், அருட்பார்வை பார்க்கமாட்டான் என்பதுவே தவிர பொதுவான பார்வை அல்ல. ஏனெனில், அல்லாஹ்வை விட்டும் எதுவும் மறைந்துவிடாது. அவனது பார்வையை விட்டும் எதுவும் ஒழிந்து விடாது.

இச்செயற்கள் மிகக் கெட்ட பாவங்களாகவும், மனிதகுலத்திற்கு ஆபத்தானவையாகவும் உள்ளன. ஏனெனில், ஈடேற்றமான மனித இயல்புடன் முரண்படல், இனப்பெருக்கம் குறைவடைதல், குடும்ப வாழ்க்கை சீர்குலைதல், குரோதம் மற்றும் விரோதம் விதைக்கப்படல், அருவருப்பான இடத்தில் உறவுகொள்ளல் போன்ற தீங்குகள் இதில் உள்ளன.

التصنيفات

கண்டிப்பதன் சட்டங்கள்