'ஒரு அடியான் குறித்த ஒரிடத்தில் மரணிக்க வேண்டும் என அல்லாஹ் விதித்திருந்தால் அந்த இடத்திற்கு செல்வதற்கான ஒரு…

'ஒரு அடியான் குறித்த ஒரிடத்தில் மரணிக்க வேண்டும் என அல்லாஹ் விதித்திருந்தால் அந்த இடத்திற்கு செல்வதற்கான ஒரு தேவையை அவனுக்கு அல்லாஹ் ஏற்படுத்துவான் ';

அல்லாஹ்வின் தூதர் கூறியதாக மதர் இப்னு உகாமிஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். 'ஒரு அடியான் குறித்த ஒரிடத்தில் மரணிக்க வேண்டும் என அல்லாஹ் விதித்திருந்தால் அந்த இடத்திற்கு செல்வதற்கான ஒரு தேவையை அவனுக்கு அல்லாஹ் ஏற்படுத்துவான் ';.

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு அடியானுக்கு ஓர் இடத்தில் மரணம் சம்பவிக்கவேண்டும் என அல்லாஹ் விதித்திருப்பான். ஆனால் அவன் குறித்த இடத்தில் இல்லாதிருந்தால் அங்கே செல்வதற்கான ஒரு தேவையை ஏற்படுத்தி அந்த இடத்தில் அவனின் உயிர் கைப்பற்றப்படும் எனக் குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் கூற்றான ' ஓர் ஆன்மா அது எந்த இடத்தில் மரணிக்கும் என்பதை அறியமாட்டாது' என்பதை -உண்மைப்படுத்துவதாக – பொருந்துவதாக அமைந்துள்ளது.

التصنيفات

கழா, கத்ர் மீது விசுவாசம் கொள்ளுதல், மரணமும் அதன் சட்டதிட்டங்களும்