إعدادات العرض
அப்போது அவர்கள் கூறினார்கள்:…
அப்போது அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழ ஆரம்பித்தால் உங்களுடைய தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்களில் ஒருவர் உங்களுக்கு(தலைமை தாங்கி)த் தொழுவிக்கட்டும். அவர் (இமாம்), தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள்
ஹித்தான் இப்னு அப்தில்லாஹ் அர்ரகாஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூமூஸா அல்அஷ்அரீ -ரழியல்லாஹு அன்ஹு- அவர்களுடன் ஒரு தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் (தொழுகையில் அத்தஹிய்யாத்) அமர்வில் இருந்தபோது ஒரு மனிதர் 'உகிர்ரத்திஸ் ஸலாத்து பில்பிர்ரி வஸ்ஸகாத்தி' (நன்மை, தானதருமம் ஆகியவற்றுடன் சேர்ந்து தொழுகையும் ஒரு கடமையாக ஏற்கப்பட்டுவிட்டது) என்று கூறினார். அபூமூஸா -ரழியல்லாஹு அன்ஹு- அவர்கள் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்துத் திரும்பியதும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது மக்கள் அமைதியாயிருந்தனர். மீண்டும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போதும் மக்கள் அமைதியாயிருந்தனர். பிறகு அவர்கள் (என்னிடம்), ஹித்தான்! நீங்கள்தாம் அதைக் கூறியிருக்க வேண்டும் என்று சொல்ல, அதை நான் கூறவில்லை. அதை நான் சொன்னதாக நினைத்துக்கொண்டு என்னைக் கண்டிப்பீர்களென பயந்துவிட்டேன் என்றேன் நான். அப்போது மக்களில் ஒருவர் நான்தான் அவ்வாறு கூறினேன். அதன் மூலம் நல்லதையே நாடினேன் என்று சொன்னார். அப்போது அபூமூஸ-ரழியல்லாஹு அன்ஹு- அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுடைய தொழுகையி(ல் அமர்வி)ல் என்ன கூற வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (ஒரு முறை) எங்களுக்கு உரையாற்றினார்கள். (அதில்) நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறையை எங்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். நாம் தொழ வேண்டிய முறையைக் கற்றுக்கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழ ஆரம்பித்தால் உங்களுடைய தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்களில் ஒருவர் உங்களுக்கு(தலைமை தாங்கி)த் தொழுவிக்கட்டும். அவர் (இமாம்), தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ஃகைரில் மஃக்ழூபி அலைஹிம் வலழ் ழால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பான். பிறகு அவர் தக்பீர் கூறி ருகூஉச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ருகூஉச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்வார். உங்களுக்கு முன் (ருகூஉவிலிருந்து) எழுந்துவிடுவார். எனவே, இது (இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு ருகூஉ செய்து, இமாமுக்குப் பிறகு நிமிர்வதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய ருகூஇன் நேரமும் சமமாகி விட்டது) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். மேலும், அவர் (இமாம்) ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்) என்று கூறினால் அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்) என்று நீங்கள் கூறுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களுடைய புகழுரையைச் செவியேற்பான். திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினான். மேலும், அவர் (இமாம்) தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தாச் செய்வார். உங்களுக்கு முன் ஸஜ்தாலிருந்து எழுவார். எனவே இது (அதாவது இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தாச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு ஸஜ்தாச் செய்து, இமாமுக்குப் பிறகு எழுவதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய சஜ்தாவின் நேரமும் சமமாகிவிட்டது) என்றும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். மேலும், நீங்கள் அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்தால் உங்களுடைய முதல் சொல் இதுவாக இருக்கட்டும்: அத்தஹிய்யாத்துத் தய்யிபாத்துஸ் ஸலவாத்து லில்லாஹி, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வரஹ்ம துல்லாஹி வ பரக்கா துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல் லாஇலாஹ இல்லல்லாஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு. (பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் பாராட்டுகளும் வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபீட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்.)
الترجمة
العربية English မြန်မာ Svenska Čeština ગુજરાતી Yorùbá Nederlands اردو Bahasa Indonesia ئۇيغۇرچە বাংলা සිංහල हिन्दी Tiếng Việt Hausa Kiswahili پښتو অসমীয়া دری Кыргызча Lietuvių Kinyarwanda नेपाली മലയാളം తెలుగు Bosanski ಕನ್ನಡ Kurdî Română Soomaali Shqip Српски Moore Українська Wolof Tagalog Azərbaycan فارسی ქართული 中文 Magyar Português Deutsch Русский አማርኛ Bambara Македонски Malagasy Oromoo ភាសាខ្មែរ ไทย मराठी ਪੰਜਾਬੀ Türkçe Italiano O‘zbek Françaisالشرح
நபித்தோழரான அபூமூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு தொழுகை நடாத்தினார்கள்;. அவர்கள் (தொழுகையில் அத்தஹிய்யாத்) அமர்வில் இருந்தபோது ஒரு மனிதர் 'குரினத் பில் குர்ஆனி ஸலாத்து பில்பிர்ரி வஸ்ஸகாத்தி' (அல் குர்ஆனில் நன்மை, தானதர்மம் ஆகியவற்றுடன் சேர்ந்து தொழுகையும் ஒரு கடமையாக ஏற்கப்பட்டு விட்டது) என்று கூறினார். அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்துத் திரும்பியதும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது மக்கள் அமைதியாயிருந்தனர். இக்கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டார்கள். அப்போது மக்கள் அமைதியாயிருந்தனர். பிறகு அவர்கள் ஹித்தானைப் பார்த்து அவரின் வீரம் மற்றும் உறவுமுறையின் நெருக்கம் காரணமாகவும் அவரை நோவிக்காத விதத்தில் உண்மையில் இந்த வார்த்தையைக் கூறிய நபரை தூண்டவேண்டும் என்ற நோக்கில் ஹித்தானே ! நீங்கள்தாம் அதைக் கூறியிருக்க வேண்டும் என்று சொல்ல, அதை நான் கூறவில்லை என்று மறுத்ததோடு அதை நான் சொன்னதாக நினைத்துக்கொண்டு என்னைக் கண்டிப்பீர்களென பயந்துவிட்டேன் என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நான்தான் அவ்வாறு கூறினேன். அதன் மூலம் நல்லதையே நாடினேன் என்று சொன்னார். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுடைய தொழுகையி(ல் அமர்வி)ல் என்ன கூற வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களுக்கு உரையாற்றினார்கள். (அதில்) நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறையை எங்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். நாம் தொழ வேண்டிய முறையைக் கற்றுக்கொடுத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீங்கள் தொழ ஆரம்பித்தால் உங்களுடைய தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்களில் ஒருவர் உங்களுக்கு (தலைமை தாங்கி)த் தொழுவிக்கட்டும். அவர் (இமாம்), தக்பீரதுல் இஹ்ராம் கூறினால், நீங்களும் அதே போன்று தக்பீர் கூறுங்கள். அவர் ஃகைரில் மஃக்ழூபி அலைஹிம் வலழ்ழால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பான். பிறகு அவர் தக்பீர் கூறி ருகூஉச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ருகூஉச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்வார். உங்களுக்கு முன் (ருகூஉவிலிருந்து) எழுந்துவிடுவார். ஆகவே நீங்கள் இமாமை முந்திச்செல்லவேண்டாம் , இதுஇமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வதுஅதற்கு நீங்கள் இமாமுக்குப் பிறகு ருகூஉச் செய்து, இமாமுக்குப் பிறகு நிமிர்வதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய ருகூஇன் நேரமும் சமமாகி விட்டது) மேலும், அவர் (இமாம்) ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்) என்று கூறினால் 'அல்லா{ஹம்ம ரப்பனா லக்கல் ஹம்து' (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்) என்று நீங்கள் கூறுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களுடைய புகழுரையைச் செவியேற்பான். திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலமஸமிஅல்லா{ஹ லிமன் ஹமிதஹ் என்று கூறினான். மேலும், அவர் (இமாம்) தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தாச் செய்வார். உங்களுக்கு முன் ஸஜ்தாலிருந்து எழுவார். எனவே இது (அதாவது இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தாச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு ஸஜ்தாச் செய்து, இமாமுக்குப் பிறகு எழுவதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய ஸஜ்தாவின் நேரமும் சமமாகிவிட்டது) மேலும், நீங்கள் அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்தால் உங்களுடைய முதல் சொல் இதுவாக இருக்கட்டும்: அத்தஹிய்யாத்துத் தய்யிபாத்துஸ் ஸலவாத்து லில்லாஹி. (இவ்வாசகமானது அதிகாரம், நித்தியம், மேண்மை ஆகியவை அனைத்திற்கும் தகுதியானவனாக அல்லாஹ் திகழ்கிறான் என்பதாகும் அதே போல் ஐவேளை தொழுகைகள் யாவும் அவனுக்கே உரித்தானதாகும். 'அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வரஹ்மத் துல்லாஹி வ பரக்காத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்' இவ்வாசகமானது அல்லாஹ்விடத்தில் ஆபத்து குறைகள் குழப்பங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பைக் கோருமாறு குறிப்பிடுகிறது. அதே போல் இங்கே முதலாவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; மீதும் ஸலாம் கூறுகிறோம் அதனைத்தொடர்ந்து எமக்கும் நல்லடியார்களின் மீதும் ஸலாம் கிடைக்க வேண்டி பிரார்த்திக்கிறோம். இதனைத் தொடர்ந்து அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதி மொழி கூறுகிறோம். மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதிமொழி கூறுகிறோம்.فوائد الحديث
இந்த ஹதீஸ் தஷஹ்ஹுதின் (அத்தஹிய்யாத்தின்) வடிவங்களில்(வார்த்தைகளில்) ஒன்றை தெளிவு படுத்துகின்றமை.
தொழுகையின் செயல்கள் மற்றும் அதன் வார்த்தைகள் யாவும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அவசியமாகும். நபி வழிமுறையில் உறுதிப்படுத்தப்படாத சொல் அல்லது செயலை புதிதாக உருவாக்குவதற்கு எவருக்கும் அதிகாரமில்லை.
இமாமை முந்திச் செல்வது மற்றும் அதிகம் தாமதமாகி செல்வது கூடாது இமாமை அவரின் செயல்களில் தாமதமின்றி பின்பற்றி செல்வது மார்க்க வழிமுறையாகும்.
மார்க்கத்தை மக்களுக்கு எத்திவைப்பதிலும் மார்க்க சட்டதிட்டங்களை தனது சமூகத்தினருக்குக் கற்றுத் தருவதிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கிருந்த கரிசனையை அவர் குறிப்பிட்டார்.
இமாம் மஃமூமாக இருப்பவருக்கு முன்மாதிரியாவார். ஆகவே தொழுகையின் செயல்சார் விடயங்களில் முந்திச்செல்வதோ அவருடன் ஒன்றாக சேர்ந்து செல்வதோ, தாமதாகிச் செல்வதோ கூடாது. மாறாக இமாம் குறிப்பிட்ட செயலில் நுழைந்துவிட்டார் என்பதை திட்டப் படுத்திக் கொண்டதன் பின் அவர் தனது செயலை ஆரம்பித்துச் செய்தல் வேண்டும். இதில் இத்திபாஉ நபி வழியாகும். அதாவது இமாம் ஒரு செயலை செய்ததன் பின் சற்றும் தாமதிக்காமல் செய்வதiயே இத்திபாஉ என்பது குறிக்கும்.
தொழுகையில் வரிசைகளை ஒழுங்குபடுத்துவது அவசியமாகும்.