உங்களில் ஒருவர் தனது உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தால், மூன்று தடவை மூக்கை சீறிவிடட்டும். ஏனெனில்…

உங்களில் ஒருவர் தனது உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தால், மூன்று தடவை மூக்கை சீறிவிடட்டும். ஏனெனில் ஷைத்தான் அவரது மூக்கினுள் இரவில் தரிக்கின்றான்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் ஒருவர் தனது உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தால், மூன்று தடவை மூக்கை சீறிவிடட்டும். ஏனெனில் ஷைத்தான் அவரது மூக்கினுள் இரவில் தரிக்கின்றான்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி (ஸல்) அவர்கள், தூங்கியெழும்புபவர் மூன்று தடவை, மூக்கினுள் நீரை செலுத்தி சீறிவிடுமாறு ஏவுகின்றார்கள். ஏனெனில் ஷைத்தான் மூக்கினுள் இரவுத் தரிக்கின்றான்.

فوائد الحديث

உறக்கத்தில் இருந்து எழும்பும் ஒவ்வொருவரும், தமது மூக்கில் இருந்து ஷைத்தானின் தாக்கத்தை நீக்கும் நோக்கில், மூக்கை சீறிவிடுவது முக்கியமாகும். அவர் வுழூ செய்வதாக இருந்தால், அவ்வாறு சீறிவிடுவது மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

மூக்கை சீறிவிடுவதென்பது, மூக்கினுள் நீர் செலுத்தி சுத்தம் செய்வதன் (இஸ்தின்ஷாக்) பலனை முழுமையாகப் பெற்றுத் தரக்கூடியதாகும். ஏனெனில், இஸ்தின்ஷாக் என்பது, மூக்கினுள் சுத்தம் செய்வதாகும். சீறிவிடுவது, அந்த அழுக்கை நீருடன் சேர்த்து வெளியேற்றிவிடும்.

இரவு உறக்கத்துடன் இது இணைக்கப்பட்டிருப்பதற்பது, 'யபீது' என்ற சொல்லின் காரணமாகும். ஏனெனில், 'யபீது' என்பது இரவில் உறங்குவதையே குறிக்கும். பெரும்பாலும் இரவு உறக்கமே ஆழ்ந்த, நீண்டநேர உறக்கமாக இருக்கும்.

மனிதன் அறியாமலேயே, ஷைத்தான் அவனுள் தாக்கம் செலுத்துகின்றான் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.

التصنيفات

வுழூ செய்யும் முறை