'நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரண்டு…

'நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகக்ள்; படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகக்ள்; படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) சேர்த்துப் பிடித்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அவர்கள் தொழுகையின் போது ஏழு உறுப்புக்களினால் ஸுஜூத் செய்யுமாறு அல்லாஹ் தனக்கு கட்டளையிட்டதாக தெளிவுபடுத்துகிறார்கள். முதலாவது : நெற்றி : மூக்கு மற்றும் இருகண்களுக்கு மேலுல்ல முகத்தின் பகுதியை குறிக்கும். ஏழு உறுப்புகளில் நெற்றியும் மூக்கும் ஒன்று என்பதை தெளிவுபடுத்தவும், ஸுஜூத் செய்பவர் தரையில்; அவரின மூக்கை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நபி ஸல்லல்லாஹு அவர்கள் தனது கையினால் மூக்கையும் சுட்டிக்காட்டினார்கள். இரண்டாவதும் மூன்றாவதும்; உறுப்பு இரு கைகளாகும். நான்காவதும் ஐந்தாவதும் உறுப்பு : இரு முழங்கால்களாகும். ஆறாவதும் ஏழாவதும் உறுப்பு இரு கால்களினதும் விரல்களாகும் எமது முடிகளையோ அல்லது எங்களது ஆடைகளையோ ஸுஜூத் செய்யும் வேளையில் சேர்த்துப் பிடிக்கக்க கூடாது என்றும் உறுப்புகளுடன் சேர்ந்து அவைகள் தரையில் படுமாறு விட்டுவிட வேண்டும் என்றும் எங்களுக்கு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.

فوائد الحديث

தொழுகையில் ஏழு உறுப்புகளினால் ஸுஜூத் செய்வது வாஜிபாகும்.

தொழுகையில் ஆடை மற்றும் முடியை சேர்த்துப் பிடித்துக்கொள்வது விரும்பத்தகாத விடயமாகும்.

ஸுஜூதின் ஏழு உறுப்புகளையும் பூமியில் வைப்பதன் மூலம் தொழுபவர் தொழுகையில் நிதானம் பேணி அமைதியாக தொழுவது வாஜிபாகும்.அத்துடன் அதில் ஓதப்படவேண்டிய திக்ரை கூறும் வரை தரித்திருப்பது அவசியமாகும்.

முடிகளை தரையில் படாதாவாறு பிடித்துக்கொள்வது தடுக்ப்பட்டிருப்பது பெண்களுக்கன்றி ஆண்களுக்குரிய குறிப்பான கட்டளையாகும்;. இது பெண்களுக்குரியதன்று ஏனெனில் அவர்கள் தொழுகையில் தலையை மறைக்குமாறு ஏவப்பட்டிருக்கிறார்கள்.

التصنيفات

தொழும் முறை