நபி (ஸல்) அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் "அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ" என்று…

நபி (ஸல்) அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் "அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ" என்று கூறுவார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் "அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ" என்று கூறுவார்கள். பொருள் : யாஅல்லாஹ் ! என்னை மன்னித்து விடு, எனக்குக் கிருபை செய்,எனக்கு சுகம் கொடு, எனக்கு நேர்வழி காட்டிடு, எனக்கு வாழ்வாதாரம் வழங்கு.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி (ஸல்) அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் "அல்லாஹும்மஃபிர்லீ" எனும் துஆவை ஓதுவார்களென இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள். அதாவது கடமையான தொழுகை, ஸுன்னத்தான தொழுகை என்ற வேறுபாடின்றி பொதுவாக எல்லாத் தொழுகைகளிலும் ஓதுவார்கள், ஏனெனில் தொழுகை அனைத்தும் திக்ரும், குர்ஆன் ஓதலும்தான். மேற்கண்ட வாசகத்தின் அர்த்தம் என்னைக் குற்றம் பிடிக்காமல், பாவங்களை மறைத்து விடுவாயாக என்பதாகும். "எனக்குக் கிருபை செய்" என்பதன் அர்த்தம் ஈருலக நலவுகளை எனக்கு அருளுவதுடன், பாவங்களை மறைத்து, குற்றம் பிடிக்காத கருணையை உன்னிடமிருந்து எனக்கு வழங்குவாயாக என்பதாகும். "எனக்கு சுகம் கொடு" என்பதன் அர்த்தம் மார்க்கத்தில் பாவங்கள், சந்தேகங்களை விட்டும், உடலில் நோய் நொடிகளை விட்டும், புத்தியில் பைத்தியம், பேதலித்தலை விட்டும் ஆரோக்கியத்தையும், ஈடேற்றத்தையும் தருவாயாக,நோய்களில் கொடூரமானது வழிகெடுக்கும் சந்தேகங்கள், அழிக்கும் ஆசைகளால் ஏற்படும் உளவியல் நோய்களாகும். "எனக்கு நேர்வழி காட்டிடு" என்பதன் அர்த்தம் நேர்வழி இரு வகைகளாகும் : 1. சத்தியம், சரியான பாதையின் பால் வழிகாட்டுதல். இது முஸ்லிம், காபிர் அனைவருக்கும் கிடைக்கக் கூடியது. "ஸமூத் கூட்டத்தினருக்கும் நாம் நேர்வழி காட்டினோம்" (புஸ்ஸிலத் : 17), அதாவது சத்தியத்தின் வழியைக் காட்டினோம். 2. சத்தியத்தைப் பின்பற்றும் பாக்கியம், ஏற்கும் சந்தர்ப்பத்தை வழங்குதல், இது விசுவாசிகளுக்கு மாத்திரமே கிடைக்கும். இந்த துஆவின் மூலம் நாடப்படுவதும் இதுவே. சத்தியத்தின் பால் வழி காட்டி, அதில் ஸ்திரமாக இருக்கச் செய் என்பதே இதன் அர்த்தமாகும். "எனக்கு வாழ்வாதாரம் வழங்கு" என்பதன் அர்த்தம் இவ்வுலகில் உனது படைப்பினங்களை விட்டும் தன்னிறைவுடன் வாழுமளவு வாழ்வாதாரம் அளித்து விடு, மறுமையில் நீ அருள் புரிந்த உனது அடியார்களுக்குத் தயாரித்து வைத்துள்ளது போன்று விசாலமான வாழ்வாதாரம் தந்துவிடு என்பதாகும்.

فوائد الحديث

தொழுகையில் இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமர வேண்டும். இது போன்ற வேறு பல நபிமொழிகளிலும் இது உள்ளது.

இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் "ரப்பிஃபிர்லீ" அல்லது "அல்லாஹும்மஃபிர்லீ" எனக் கூறுவது அவசியமாகும்.

நபிமொழியில் உள்ளது போன்று இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் கூறுவதே சிறந்ததாகும், அதில் கூட்டல் குறைத்தல் செய்தால் அதன் மூலம் தொழுகை முறியாது.

التصنيفات

தொழும் முறை, தொழும் முறை, தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகள், தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகள்