நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுள்ளேன். அவர்கள் தனது வலப்புறமாக திரும்பி, السَّلَامُ عَلَيْكُمْ…

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுள்ளேன். அவர்கள் தனது வலப்புறமாக திரும்பி, السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ என்றும் இடப்புறமாக திரும்பி, السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ என்றும் கூறி, ஸலாம் கொடுப்பார்கள்

வாஇல் பின் ஹுஜ்ர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுள்ளேன். அவர்கள் தனது வலப்புறமாக திரும்பி, السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ என்றும் இடப்புறமாக திரும்பி, السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ என்றும் கூறி, ஸலாம் கொடுப்பார்கள்.

[நம்பகமானது (ஹஸன்)] [இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை நிறைவு செய்ய நாடினால் வலப்புறமாகவும், இடப்புறமாகவும் ஸலாம் கொடுப்பார்கள். அதாவது தனது முகத்தை வலப்புறம் திருப்பி السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ என்றும் பின்னர் முகத்தை இடப்புறம் திருப்பி السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ என்றும் கூறுவார்கள்.

فوائد الحديث

தொழுகையில் இருதடவைகள் ஸலாம் கொடுப்பது மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது. அது தொழுகையின் கடமைகளில் ஒன்றாகும்.

“வபரக்காதுஹூ” என்பதை சில சந்தர்ப்பங்கள் இணைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், நபி அவர்கள் அவ்வாறு தொடர்ந்து கூறபவர்களாக இருக்கவில்லை.

தொழுகையில் இரு ஸலாம்களையும் வாயால் கூறுவது கட்டாயக் கடமையாகும். அவ்வாறு கூறும் போது முகத்தை திருப்புவது சுன்னாவாகும்

السلام عليكم ورحمة الله என்பதை திரும்பும் போது கூற வேண்டுமே தவிர அதற்கு முன்னரோ பின்னரோ அல்ல.

التصنيفات

தொழும் முறை