அல்லாஹ்வின் மீதாணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம்…

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில் நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாதே! என்று கூறினார்கள். ஆகவே, நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (திரும்பவும்) சென்று, அவர்களுக்கு அதை நினைவு படுத்தினோம். அப்போது அவர்கள், 'நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை; மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனிமேல் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்து விடுவேன்' என்று சொன்னார்கள்

அபூமூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ் நாடிய நேரம்வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு சில ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் மூன்று ஒட்டக மந்தைகளை எங்களுக்கு வழங்கும்படி ஆணையிட்டார்கள். (அவற்றில் ஏறி) நாங்கள் சென்றபோது, எங்களில் சிலர் சிலரிடம், நபி ஸல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நம்மைச் சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றியனுப்பத் தம்மால் இயலாது என நபியவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு, நாம் ஏறிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில் நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாதே! என்று கூறினார்கள். ஆகவே, நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (திரும்பவும்) சென்று, அவர்களுக்கு அதை நினைவு படுத்தினோம். அப்போது அவர்கள், 'நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை; மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனிமேல் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்து விடுவேன்' என்று சொன்னார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

அல்லாஹ்வின் தூதரிடம் தனது கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு குழுவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தது குறித்து அபூமுஸா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஜிஹாதில் கலந்து கொள்வதற்கு அவர்களை ஏற்றிச்செல்ல ஒரு ஒட்டகத்தை வழங்குமாறு கோரியே நபியவர்களிடம் அவர்கள் சென்றார்கள். அப்போது நபியவர்கள் தன்னிடம் அவர்களை ஏற்றிச்செல்வதற்கான ஒட்டகம் இல்லையென்பதால் அவர்களை ஏற்றிச்செல்ல முடியாது என சத்தியம் செய்தார்கள். உடனே அவர்கள் திரும்பிச்சென்று சற்று நேரம் தாமதித்துக் காத்திருந்தார்கள். பின் நபியவர்களுக்கு மூன்று ஓட்டகைகள் கிடைத்தன அவற்றில் ஒன்றை அவர்களுக்கு நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். அப்போது அவர்களில் சிலர் மற்றவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களை ஏற்றிச் செல்லமாட்டோம் என சத்தியம் செய்திருப்பதால் இந்த ஒட்டகத்தில் அல்லாஹ் பரக்கத் செய்ய மாட்டான் என்று கூறினார்கள். உடனே அவர்கள் நபியவர்களிடம் வந்து இது குறித்து விசாரிக்கவே, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உங்களை ஏற்றி அனுப்புபவன் அல்லாஹ். ஏனெனில் அவனே அதற்கான நல்வாய்ப்பை தந்து அதற்கான வசதியை ஏற்படுத்தினான். என்னைப் பொறுத்தவரை நான் இது நிகழ்வதற்கான ஒரு காரணமாகவே உள்ளேன் என்றும் குறிப்பிட்டார்கள். தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில் , அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ் நாடினால், நான் ஒரு விஷயத்தைச் செய்வதாகவோ அல்லது கைவிடுவதாகவோ சத்தியம் செய்துவிட்டு, சத்தியம் செய்ததை விட மிக சிறந்த ஒன்றை காணும் பட்டசத்தில் சத்தியம் செய்ததை விட்டுவிட்டு மிகச் சிறந்ததை தேர்வு செய்து விட்டு என் சத்தியத்திற்கான பரிகாரத்தை செய்வேன் என்று கூறினார்கள்.

فوائد الحديث

எதிர்காலத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும் கூட, சில தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக, கேட்கப்படாமலேயே சத்தியம் செய்வது அனுமதிக்கப்படுகிறது.

சத்தியம் செய்த பிறகு 'அல்லாஹ் நாடினால்' என்ற சொற்றொடரைக் கொண்டு விதிவிலக்கு அளிக்க அனுமதிக்கப்படுகிறது. விதிவிலக்கு நோக்கமாகக் கொண்டு சத்தியத்துடன் தொடர்புடையதாக இருந்தால், சத்தியம் மீறப்பட்டால் எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை.

ஒரு முஸ்லிம் சத்தியம் செய்த விடயத்தை விட சிறந்த தேர்வைக் கண்டால் தனது சத்தியத்தை மீறவும், தனது சத்தியத்திற்குப் பரிகாரம் செய்யவும் ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.

التصنيفات

சத்தியங்களும் நேர்ச்சைகளும்