பெருந்தொடக்கிற்காக குளிக்கும் முறை

பெருந்தொடக்கிற்காக குளிக்கும் முறை

உம்முல் முஃமினீன் மைமூனா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : 'நான் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வைத்து விட்டு, ஒரு துணியால் அவர்களுக்குத் திரையிட்டேன். அவர்கள் (முதலில்) தம் கைகளின் மீது தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கரத்தில் தண்ணீர் ஊற்றி, தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். மேலும், தமது முகத்தையும் (முழங்கைவரை) இரு கைகளையும் கழுவினார்கள்: பிறகு தமது தலையில் தண்ணீர் ஊற்றினார்கள்: தமது உடம்பிற்கும் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம் பாதங்களைக் கழுவினார்கள். (குளித்த) உடன் அவர்களிடம் நான் (துடைப்பதற்கு) ஒரு துணியை எடுத்துக்கொடுத்தேன். ஆனால், அதை அவர்கள் வாங்கிக்கொள்ளவில்லை; தம் கைகளை உதறிக்கொண்டே சென்றுவிட்டார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

பெருந்தொடக்கிற்கான நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குளிப்பின் முறை குறித்து உம்முல் முஃமினீன் மைமூனா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது மைமூனா ரழி அவர்கள்; நபியவர்களுக்கு குளிப்பதற்கான நீரை வைத்துவிட்டு ஓரு துணியினால் மறைத்து விட்டார். அவ்வேளை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் விடயங்களை செய்தார்கள் : முதலாவது : கையை பாத்திரத்தினுள் இடுவதற்கு முன் அவர்கள் தனது இரு கைகளையும் நீர் ஊற்றிக் கழுவியமை. இரண்டாவது : ஜனாபத்தின் விளைவால் படிந்திருப்பவற்றை சுத்தம் செய்யும் வகையில், வலது கையினால் இடது கையில் நீரை வார்த்து தனது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். மூன்றாவது : கையில் படிந்துள்ள அசுத்தத்தை நீக்குவதற்காக இரு கைகளையும் தரையில் படர்த்தி தேய்த்துவிட்டு பின்னர் கழுவினார்கள். நான்காவது : வாயில் நீர்விட்டு நன்றாக அலசி விட்டு அதனைக் கொப்பளித்தார்கள். அத்துடன் நாசுக்கும் நீர் செலுத்தி அதனையும் வெளியேற்றினார்கள். ஜந்தாவது: முகத்தையும் இரு முழங்கைகளையும் கழுவினார்கள். ஆறாவது: தலைக்கு தண்ணீர் உற்றினார்கள். ஏழாவது: உடலின் ஏனைய பகுதிகளுக்கு நீர் ஊற்றினார்கள். எட்டாவது: தான் குளித்த இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து தனது இரு கால்களையும் கழுவினார்கள். பின்னர் மைமூனா (ரழி) அவர்கள் துடைப்பதற்காக ஒரு துண்டுத்துணியை எடுத்துக் கொடுக்க அதனை நபியரவர்கள் எடுக்காது தனது கையால் நீரை துடைத்ததோடு அதனை உதரலானார்கள்.

فوائد الحديث

இந்த சமூகத்திற்கு கற்றுக்கொடுப்பதற்காக நபியவர்களின் மனைவியர் அவர்களின் வாழ்வை மிகத்துல்லியமாக விவரிப்பதில் ஈடுபாடுகாட்டியமை.

ஜனாபத் குளிப்பு முறையின் முழுமையான வடிவங்களில் பல முறைகள் நபியவர்களின் மூலம் கிடைக்கப் பெற்றிருப்பின் அதன் முறைகளில் ஒன்றை இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகின்றமை. ஆனால் பொதுவான குளிப்பை பொறுத்தவரை நாசுக்கு நீர் செலுத்தி உடலை நனைப்பதைக் குறிக்கும்.

குளிப்பு மற்றும் வுழுவின் பின் டவல் போன்ற துணியொன்றினால் துடைப்பது அல்லது துடைக்காது இருப்பது இரண்டும் அனுமதிக்கப்பட்டதாகும்.

التصنيفات

குளிப்பு