விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமமாக இருக்கும் என்று இல்லையென்றிருந்தால், ஒவ்வொரு…

விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமமாக இருக்கும் என்று இல்லையென்றிருந்தால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியிருப்பேன்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமமாக இருக்கும் என்று இல்லையென்றிருந்தால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியிருப்பேன்.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

தனது சமுதாய விசுவாசிகளுக்கு சிரமமாக இருக்கும் என்ற பயம் இல்லையென்றிருந்தால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியிருப்பதாக நபியவர்கள் இங்கு கூறுகின்றார்கள்.

فوائد الحديث

நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்துடன் மிருதுவாக நடந்துகொண்டுள்ளதோடு, அவர்களுக்கு சிரமம் ஏற்படுவதைப் பயந்துள்ளார்கள்.

அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் ஏவல்கள் கடமைகளாகவே எடுத்துக்கொள்ளப்படும்; அது ஸுன்னா என்பதை வேறு ஒரு ஆதாரம் உணர்த்தினாலே தவிர.

தொழுகையின் போது பல் துலக்குவது ஸுன்னவும் சிறப்புக்குரியதுமாகும்.

இப்னு தகீக் அல் ஈத் (ரஹ்) கூறுகின்றார்கள்: தொழுகைக்காக செல்லும் போது பல் துலக்குவது விரும்பப்படுவதற்கான காரணம், அது அல்லாஹ்வுடன் நெருக்கமாகும் சந்தர்ப்பமாக இருப்பதாகும். எனவே, வணக்கத்தின் கண்ணியத்தைப் போற்றும் விதத்தில், பூரண சுத்தமான நிலையில் இருப்பது அவசியமாகின்றது.

இந்த ஹதீஸ் பொதுவாக இருப்பதால், நோன்பாளியின் லுஹர், அஸர் போன்ற சூரியன் சாய்ந்த பின்னரான தொழுகைகளும் இதனுள் உள்ளடங்கும்.

التصنيفات

நபியவர்களின் நேரக வர்ணனை