அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக ஸஜ்தா செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு ஸஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு…

அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக ஸஜ்தா செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு ஸஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு அந்தஸ்தை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்கிறான்

மஃதான் இப்னு அபீதல்ஹா அல்யஃமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து, என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை சொல்லித்தாருங்கள் அதன் மூலம் என்னைச் சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வேண்டும் அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரழி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம்கேட்டபோது இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக ஸஜ்தா செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு ஸஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு அந்தஸ்தை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்கிறான் என்று கூறினார்கள். என்றார்கள். பின்னர் நான் அபுதர்தா (ரழி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் ரழி அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

சுவர்க்கத்திற்குள் பிரவேசிக்க காரணமாக அமையும் செயல் குறித்து அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல்கள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேள்வி கேட்டவரைப் பார்த்து (அதிகமான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம்) அதிகமாக ஸுஜுத் செய்வதை பேணி வருவீராக, அவ்வாறு நீ செய்யும் ஒரு ஸஜ்தா உனது ஒரு அந்தஸ்த்தை உயர்த்தும். உனது குற்றமொன்றை அல்லாஹ் அதன் மூலம் மன்னித்து விடுகிறான் என்று பதிலளித்தார்கள்.

فوائد الحديث

பர்ளான, நப்லான தொழுகைகளில் அதிகமான ஸுஜூதுகள் உள்ளடங்கியிருப்பதால்; ஒரு முஸ்லிம் அவற்றில் ஆர்வம் கொண்டு நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்டிருத்தல்.

அல்லாஹ்வின் கருணைக்குப் பின் அமல்களின் மூலமே சுவர்க்கம் செல்ல முடியும் என்ற ஸஹாபாக்களின் புரிதல் இந்த ஹதீஸில் சுட்டிக் காட்டப்படுகிறது.

தொழுகையில் ஸுஜூத் செய்வது அந்தஸ்த்துக்கள் உயர்த்தப்படவும் குற்றங்கள் மன்னிக்கப்படவும் மிகப்பெரும் காரணமாக உள்ளது.

التصنيفات

தொழுகையின் சிறப்பு