யார், 'ஸுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹீ' (மகத்துவம் மிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் புகழ்கின்றேன்.)…

யார், 'ஸுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹீ' (மகத்துவம் மிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் புகழ்கின்றேன்.) என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனத்தில் ஒரு ஈத்தம்பழ மரம் நட்டப் படும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யார், 'ஸுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹீ' (மகத்துவம் மிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் புகழ்கின்றேன்.) என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனத்தில் ஒரு ஈத்தம்பழ மரம் நட்டப் படும்.

[சரியானது] [இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

இங்கு நபியவர்கள், யார், 'மகத்தான (அதாவது தன்னிலையிலும், பண்புகளிலும், செயற்களிலும் மகத்தானவனாக உள்ள) அல்லாஹ்வைத் துதிக்கின்றேன் (அதாவது தூய்மைப் படுத்துகின்றேன்) மேலும் அவனைப் புகழுகின்றேன் (அதாவது பரிபூரணத்துவப் பண்புகளை இணைத்த நிலையில்)' என்று கூறுகின்றாரோ, அவருக்கு அவர் கூறும் ஒவ்வொரு தடவையும், சுவனபூமியில் ஒரு ஈத்தம்பழ மரம் நட்டப்படும் என்று அறிவிக்கின்றார்கள்.

فوائد الحديث

அல்லாஹ்வை அதிகம் நினைவுகூற ஆர்வமூட்டல். அல்லாஹ்வைப் புகழ்வதுடன் துதிப்பதும் அதில் ஒன்றாகும்.

சுவனம் விசாலனமானது. அல்லாஹ்வின் அருள் மற்றும் பேருபகாரத்தின் காரணமாக, அதில் நடப்படுபவையாக, தஸ்பீஹும் தஹ்மீதும் (அல்லாஹ்வைத் துதிப்பதும், புகழ்வதும்) உள்ளன.

இந்த ஹதீஸில் ஏனைய மரங்கள் இன்றி, ஈத்தம்பழ மரம் மாத்திரம் குறிப்பிடப்படக் காரணம், அதன் அதிக பயன்களும், அதன் பழங்கள் சுவையாக இருப்பதுமாகும். அதனாலேயே, அல்லாஹ் ஒரு விசுவாசிக்கும் அவனது ஈமானுக்கும் உதாரணமாக அதனைக் கூறியுள்ளான்.

التصنيفات

திக்ரின் பயன்கள்