ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால், அவர் தமது நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில், அவரை அல்லாஹ்வே…

ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால், அவர் தமது நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில், அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால், அவர் தமது நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில், அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

ஒருவர் கடமையான (பர்ழான) அல்லது நப்லான- நோன்பு நோற்று இருக்கும் நிலையில் மறதியாக சாப்பிட்டால் அல்லது ஏதாவது பானத்தை குடித்து விட்டால் அவர் நோன்பை விட்டுவிடாது அதனைப் பூரணப்படுத்தல் வேண்டும்; ஏனெனில் இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவருக்குக்கு கிடைத்த உணவாகும். இந்த வகையில் அல்லாஹ்வே அவருக்கு உணவளித்து குடிக்கக் கொடுத்தான் என நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.

فوائد الحديث

நோன்பு நோற்ற நிலையில் மறதியாக சாப்பிட்டால் அல்லது ஏதாவது பானத்தை அருந்திவிட்டால் அவரின் நோன்பு செல்லுபடியாகும்.

நோன்பின் போது மறதியாக உன்ணுபவர் அல்லது குடிப்பவர் மீது எந்தக் குற்றமுமில்லை. ஏனெனில் இது அவரின் சுயவிருப்பத்திற்கு அப்பால் நிகழ்ந்த விடயமாகும்.

இந்த ஹதீஸ் அல்லாஹ் தன் அடியார்களிடம் கொண்டுள்ள கருணையை விவரிப்பதோடு, அவர்களுக்கு மார்க்கச் சட்டங்களை எளிதாக்கி, அவர்களின் கஷ்டங்களையும் சிரமங்களையும் நீக்குகிறான் என்பதை எடுத்து காட்டுகிறது.

ஒருவர் தனது நோன்பை முறிக்கும் செயல் ஒன்றைச் செய்தாலும், அவரது நோன்பு முறிவதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன. (1) குறித்த செயலானது தனது நோன்பை முறிக்கும் ஒரு செயல் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்; அவர் அதை அறியாமல் செய்தால், அவரது நோன்பு முறியாது. (2) அவர் தனது நோன்பை முறிக்கும் ஒரு செயலைச் செய்யும் போது சுயநினைவுடன் செய்ய வேண்டும்; அவர் அதை மறதியால் செய்தால், அவரது நோன்பு முறியாது. அவர் அந்த நோன்பை மீண்டும் நிறைவேற்ற வேண்டியதில்லை. (3) அவர் அதை சுயவிருப்பத்துடன் செய்திருத்தல் வேண்டும்; யாராவது அவரை நோன்பை முறிக்கும் ஒன்றைச் செய்ய வற்புறுத்தினால், அவரது நோன்பு முறியாது.

التصنيفات

நோன்பை முறிக்கும் காரியங்கள்