எமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) இடையில் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி…

எமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) இடையில் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: எமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) இடையில் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்'

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கும் அவர்கள் அல்லாத காபிர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் ஆகியோருக்கிடையிலான ஒப்பந்தமும், உடன்படிக்கையும் தொழுகையாகும். யார் அதனை விட்டுவிடுகிறாரோ அவர் காபிராகிவிட்டார், என இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.

فوائد الحديث

தொழுகையின் தனித்துவமும் அந்தஸ்த்தும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு முஃமினுக்கும் காபிருக்குமிடையிலான பிரிகோடாகவும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளமை.

இஸ்லாமிய சட்டங்கள் ஒரு மனிதனின் மறைவான விடயங்களுக்கு அப்பால் வெளிப்படையான விடயங்களைக் கொண்டே நிரூபிக்கப்படும்.

التصنيفات

இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றுபவை, நிராகரிப்பு, தொழுகையின் அவசியமும் அதனை விட்டுவிடுபவருக்கான சட்டமும்