'அதன் நீர் பரிசுத்தமானது, அதில் இறப்பவைகளும் ஹலாலானவையே' என்று கூறினார்கள்

'அதன் நீர் பரிசுத்தமானது, அதில் இறப்பவைகளும் ஹலாலானவையே' என்று கூறினார்கள்

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் 'அல்லாஹ்வுடைய தூதரே! நாம் கடல் பயணம் செய்கின்றோம். அப்போது, எம்முடன் சொற்பமான அளவு நீரையே சுமந்து செல்கின்றோம். அதைக் கொண்டு நாம் வுழூ செய்துவிட்டால், தாகித்துவிடுவோம். கடல் நீரால் நாம் வுழூ செய்யலாமா?' என்று கேட்டார். அப்போது நபியவர்கள், 'அதன் நீர் பரிசுத்தமானது, அதில் இறப்பவைகளும் ஹலாலானவையே' என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [رواه أبو داود والترمذي والنسائي وابن ماجه وأحمد]

الشرح

ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து, நாம் மீன் பிடித்தல், வியாபாரம் போன்ற நோக்கங்களுக்காக கப்பல்களில் பயணம் செய்கின்றோம். அப்போது நாம் குடிப்பதற்குப் பொருத்தமான சொற்ப அளவு நீரையே கொண்டு செல்கின்றோம். குடிப்பதற்கான நீரை, வுழூ செய்வதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தினால், அது தீர்ந்து விடும். குடிப்பதற்கு எமக்கு நீர் இருக்கமாட்டாது. எனவே, கடல் நீரில் இருந்து நாம் வுழூ செய்யலாமா? என்று கேட்டார். அப்போது நபியவர்கள், கடல் நீரைப் பற்றி, 'அதன் நீர் சுத்தமானது, மேலும், சுத்தப்படுத்தக் கூடியது. அதைக் கொண்டு வுழு செய்யவும், குளிக்கவும் செய்யலாம். அதிலிருந்து வெளிப்படும் மீன்கள் போன்றவற்றை சாப்பிடலாம். அவை வேட்டையாடப்படாமல், இறந்த நிலையில், நீரின் மேல் மிதந்துகொண்டிருந்தாலும் சரியே!

فوائد الحديث

இறந்த கடல் மிருகங்கள் ஹலாலாகும். அதாவது, கடலில் மாத்திரம் வாழந்து இறந்தவையே இங்கு நாடப்படுகின்றது.

மேலதிக தகவல்களை வழங்கும் நோக்கில், கேட்பவருக்கு, அவர் கேட்டதை விட அதிகமான பதில்களை வழங்குதல்.

நீரின் சுவையோ, நிறமோ, வாடையோ சுத்தமான ஒன்றைக் கொண்டு மாற்றமடைந்தாலும், அது அதன் யதார்த்த நிலையில் இருக்கும் போதெல்லாம், தொடர்ந்து சுத்தமாகவே இருக்கும். அது கடும் உவர்ப்பு நிலையிலோ, சூட்டு நிலையிலோ, குளிர் நிலையிலோ இருந்தாலும் சரியே!

கடல் நீர் சிறிய, பெரிய தொடக்குகளை நீக்கும். சுத்தமான உடல், ஆடை போன்றவற்றில் படும் அசுத்தங்களையும் நீக்கும்.

التصنيفات

நீரின் சட்டங்கள்