“நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம்: ஒரு ஆணின் பார்வை திடீரென்று ஒரு அந்நியப் பெண்ணின் மீது எவ்வித…

“நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம்: ஒரு ஆணின் பார்வை திடீரென்று ஒரு அந்நியப் பெண்ணின் மீது எவ்வித நோக்கமின்றிப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்: உடனடியாக எனது பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்''

ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : “நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம்: ஒரு ஆணின் பார்வை திடீரென்று ஒரு அந்நியப் பெண்ணின் மீது எவ்வித நோக்கமின்றிப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்: உடனடியாக எனது பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்''.

[சரியானது] [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம்: ஒரு ஆணின் பார்வை திடீரென்று ஒரு அந்நியப் பெண்ணின் மீது எவ்வித நோக்கமுமின்றிப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்: அவர் அந்நியப்பெண்ணைப் பார்ப்பதை உணர்ந்தால் உடனடியாக முகத்தைத் திருப்பி வேறு பக்கம் பார்க்குமாறு வலியுறுத்தினார்கள். அவர் அவ்வாறு செய்தால், அவர் மீது எந்தப் பாவமும் இல்லை.

فوائد الحديث

பார்வையைத் தாழ்த்துமாறு வலியுறுத்துதல்.

பார்க்கத் தடைசெய்யப்பட்ட ஒன்றை திடீரெனவும் தற்செயலாகவும் பார்த்தால், அதனைத் தொடர்ந்து பார்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

அந்நியப் பெண்ணைப் பார்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நபித்தோழர்கள் அறிந்திருந்தனர் என்பதை இந்த ஹதீஸ் காட்டுகிறது. ஜரீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தற்செயலான பார்வைகளைப் பற்றிக் கேட்டு, வேண்டுமென்றே பார்க்கும் பார்வைகளுக்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா என்பதைக் கண்டறிய முயன்றது இதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.

இந்த ஹதீஸ் அந்நியப் பெண்களைப் பார்ப்பது பல்வேறு இம்மை மற்றும் மறுமை தீமைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அது தடைசெய்யப்பட்டதாக குறிப்பிடுகிறது. இதிலிருந்து இஸ்லாமிய மார்க்கமானது அடியார்களின் நலன்களில் கவனம் செலுத்துகிறது என்பது தெளிவாகிறது.

நபித்தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து தங்களுக்கு சந்தேகமான விடயங்களைப் பற்றி கேட்பார்கள். அதேபோல், பொதுமக்களும் தங்களை மார்க்கவிடயத்தில் சந்தேகமான தெளிவற்ற விடயங்களைப் பற்றி அறிஞர்களிடம் கேட்க வேண்டும்.

التصنيفات

உளப்பரிசுத்தம் செய்தல்